பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

“இந்தாங்க உங்க ரிஸ்ட் வாட்ச் !”

மணி ஆறு நாற்பது:

“புறப்படுவோமா ?”

“நல்லதுங்க!”

அறைக் கதவுகளையும் மாடி வழிக் கதவையும் பூட் டிக்கொண்டு அவன் இறங்கினான்.

அதற்குள் படிதாண்டிக் கீழ்த்தள முகப்பை அடைந்து விட்டாள் ஊர்வசி

பொருட்காட்சி சாலைப் பொருளைப் பார்ப்பதுபோல பலப்பல கண்கள் அவளை மொய்த்திருந்தன.

அம்பலத்தரசன் படிகளைத் தாண்டிக் கொண்டிருந்த அதே நேரத்தில், அவன் அறையிலிருந்த டெலிபோன் 'கண கண’ வென்று ஒலிக்கத் தலைப்பட்டது!

அவ்வுண்மையை அவன் அறியான் !

"வா போகலாம், அதோ டாக்ஸி! "

6

டாக்ஸிக்குச் சிறகுகள் இல்லை அல்லவா? பின் எப்படிப் பறந்தது. அது ?

போர்த்துக்கீசிய மாதா கோவில் தெருவின் நடுமை யத்தில், வீதியின் மேலோரத்தில் நின்ற பண்டைய வேப்ப மரத்து நிழலிலே கொலு வீற்றிருந்தாள் பூர் தண்டு மாரி யம்மன். மிகவும் சக்தி படைத்த தாய் அவள், ஊராளும் உலகாளும் அன்னையின் சக்திக்குக் கேட்கவா வேண்டும்?