பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103


அவளை அவன் அழைத்துச் சென்றான்.

நீதியின் வாசலைக் கடக்கத் தனக்கு அருகதை இல்லை என்பதுபோல, அவள் தன் வீட்டின் வாசலில் எள்ளத் தனை பொழுது அப்படியே சிலையாகி நின்றாள். அவளைக் கைப்பிடித்து இட்டுச் சென்றான் அவன்.

வாசல் வழி விட்டது.

குடியிருப்பு மனையின் முதற்பகுதி நிலைப்படியில் காத்துத் தவம் கிடந்த முதியவள் ஒருத்தி ஊர்வசியைக் கண்டவுடன் ஆனந்தக் கடலாடி, “ஊர்வசி வந்திட்டி யாடி அம்மா ? ராத்திரி மு ச் சூ டு ம் என் வயித்திலே நெருப்பைக் கட்டிக்கிட்டு இருந்தேனே அம்மா ? நல்ல வேளை, என் வயித்திலே பாலை வார்த்தியே ‘ என்று ஆனந்தப் பெருமூச் செறிந்து, மகளை வரவேற்றாள் : கண்கள் கசிந்தன. வெள்ளைப் புடவையின் நுனியைக் கொய்து மூக்கைத் துடைத்துக் கொண்டாள்.

‘அம்மா !” என்று சொல்லிய ஊர்வசி தன் தாயின் மார்பில் சாய்ந்தாள். பிறகு, அம்பலத்தரசனைச் சுட்டிக் காட்டி இவங்களைத் தெரியுமில்ல அம்மா ?” என்றாள்.

அப்பொழுதுதான் அம்பலத்தரசனைக் கவனித்தாள் இந்த அம்மாள்; வாங்கய்யா. இவங்களையா தெரியாது?. நீ நடிச்சமொதல் நாடகத்தைச் சிலாகிச்சு எழுதியவங் களாச்சே ‘ என்றாள்.

“ஒருவாட்டி நான் இங்கே வந்தப்ப- 676T656T உங்க பொண்ணு அழைச்சிட்டு வந்தப்ப-தஞ்சாவூர் டிக்ரி காப்பி யாட்டமே காப்பி போட்டுக் குடுத்த மீனாட்சி அம்மாளை நான் மறக்கவே மாட்டேனுங்க” என்று நன்றியறிவு மாறாமல் வெளியிட்டான் அம்பலத்தரசன்.