பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104


“வாம்மா. உள்ளே நீங்களும் வாங்காய்யா’ என்று கூறிக் கொண்டு, அவள் முன்னே நடந்தாள்.

கூடம் வந்தது.

உள்ளே இருந்த தண்ணிர்க் குடத்தை எடுத்து வெளிப் பக்கம் வைத்தாள் பாயை உதறிப் போட்டாள்.

“உட்காருங்க” என்று உபசரித்தாள் மீனாட்சி அம்மாள். -

அம்பலத்தரசன் சம்மணம் கோலிக் குந்தினான். சட்டைப் பையிலிருந்த ஊர்வசியின் உறைக்கடிதம் உறுத்திக் கொண்டிருந்தது. அதை மடிப்பு நீக்கி வைத்துக் கொண்டான். அவன் ஊர்வசியைத் தேடியபோது, அவள் கண்கள் அவனைத் தேடின.

‘வாம்மா. உள்ளாற’ என்று மகளை அழைத்துச் சென்றாள். பெற்றவள். சமையல் கட்டுக்குச் சென்றாள். ஊர்வசி.

கீழ்த் தொங்கலில் சீமை ஒடு உடைந்து இருந்தது. அவ்வழியே கதிரொளி பாய்ந்த வண்ணம் இருந்தது. சிட்டுக் குருவிகள் பறந்தன.

“ராத்திரி நாடகம் முடிஞ்சதும் எங்கேம்மா போனே? கன்னி கழியாப் பொண்ணு, அந்நியம் அசலிலே ராத் தங்கலாமா ? பாதி சாமத்துக்கு மேலே, ஒரு யோசனை ஒடுச்சு. பக்கத்து பங்களாவுக்கு ஒடிப்போய் பூமிநாதனுக்குப் போன் பேசினேன். உன்னோட நாடகத்திலே நடிச்சபிள்ளை யாச்சேன்னு, போன் பண்ணினேன் ! தங்கப் பிள்ளை அது. உடனே தூக்கத்திருலேயிருந்து எழுந்து வந்து பேசிச்சு நாடகம் முடிஞ்சதும் நீ வீட்டுக்குப் புறப்பட்டிட்டதாச் சொல்லிச்சு சொன்னதோடே நிற்கலை , இங்கே வேறே வந்திச்சு விடியற வரைக்கும் எங்கெல்லாமோ தேடிச்சாம். நீ தட்டுப்படலையாம்!” -