பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

அவள் : ஊர்வசி !

காலடியில் கிடந்த அருமைப் புதல்வி நெஞ்சடியில் வீசிய கேள்விக்கு இன்ன பதில் சொல்வது என்று பட்டும் படாமல் விழித்தாள் தாய். தாய்ப்பாசம் ரத்தக் கண் ணீரை வடித்தது. குனிந்து மகளை ஏந்தித் தூக்கினாள் பெற்றவள். தூக்கின சடுதியில், மீனாட்சி அம்மாளின் தளர்ந்த கைகள் ஊர்வசியின் நெஞ்சில் அழுந்தி விட்டன போலும் !

ஊர்வசி துடியாய்த் துடித்துப் போனாள். அவள் தன் மார்பகத்தை மேலாகத் தடவி விட்டுக் கொண்டாள்.

"இப்போ என்னை என்னம்மா செய்யச் சொல்லுறே நீ ?" என்று வேதனையின் உச்சத்தில் நின்று கேட்டாள் ஊர்வசி.

'நீ இப்போ என்ன சொல்லச் சொல்லுறே என்னை? அதை முதலிலே சொல்லு’ என்று கெஞ்சினாள் அன்னை.

“நீ செத்திடாமல் இருந்தால் அதுவே போதுமம்மா" என்று இறைஞ்சினாள் மகள்.

“நீயும் செத்திடாதேம்மா" எ ன் று விம்மினாள் தாய்-அம் மகளை ஈன்ற மாதா.

“சரியம்மா !”

“நானும் உசிரோட இருக்கிறேன், தாயே! "-மகளின் கன்னங்களைத் தடவிக் கொடுத்தாள் அவள்.

அன்னையின் கண் ணிரைத் துடைத்தாள் மகள்.

மகளை ஆரத் தழுவினாள் மீனாட்சி அம்மாள் ஏதோ சிந்தனை வசப்பட்டாள், ஒரு வினாடி. பிறகு ஆத்திரம் பொங்கியது, அவளது தளர்ந்தொடுங்கிய வதனத்தில்.