பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108


“உன்னைக் கெடுத்த அந்தப் பாவி யாரம்மா? சொல்லு இப்பவே போய் அவன் ர த் த த் ைத க் குடிச்சிட்டு வந்திடுறேன்! சொல்லு மக்ளே’ என்று கேட்டாள். பழி வாங்கத் துடித்தாள் அவள்.

“அந்தப் பாவியின் ரத்தத்தைக் குடிக்கிற கடமை என்னோடேயே இருக்கட்டும். நீ ஆத்திரப்படாதேம்மா! அந்தத் துரோகியைப் பத்தி இப்போ ஒண்ணும் சொல்ல மாட்டேன். நான்! அவனை நானே உன் முன்னாலே கொண்டாந்து நிறுத்திடுறேன். அம்மா! என்னை நம்பும்மா” என்று உறுதி மொழிந்தாள் அபலை ஊர்வசி. கையடித்துக் கொடுத்தாள்!

‘அம்மா மகளே! நீதானே என்னோட நம்பிக்கை, நாணயம் எல்லாம்! நீ இல்லைன்னா, நான் மாண்ட இடம் எப்பவோ புல் மண்டிப் போயிருக்குமே! சரியம்மா! உம். இனி உன் கதி?... என்று புதிய பிரச்னை ஒன்றைக் கிளப்பி விட்டு, மீண்டும் விம்மத் தொடங்கினாள் மீனாட்சி அம்மாள்.

அன்னைக்குப் பதில் .ெ சா ல் ல வாயைத் திறந்தாள் புதல்வி.

அப்போது, அங்கே தோன்றினான் அம்பலத்தரசன் . மீனாட்சி அம்மாளின் அருகில் வந்து நின்றான்.

“அம்மா! உங்க மகள் தனக்கு ஏற்பட்ட துர்பாக் கியத்தை ஒரு புது சக்தியோடு சுமந்துக்கிட்டு, என்னை நம்பி வந்துடுச்சு, ராத்திரி. தேவதையைக் கண்ட மாதிரி இருந்திச்சு எனக்கு. நடப்பைச் சொல்லி, என்கிட்டே அடைக்கலம் அடைஞ்சுது. என் பேரிலே அதுக்கு இருக்கிற அந்த நம்பிக்கையையே என்னோட கடமையின்னு கருதி, அதோட இஷ்டப்பிரகாரமே அதை என் சொத்தாய் ஆக்கிக் கிடுறதாகவும் உறுதி கொடுத்தேன். ராத்திரி என் அறை