பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

直7直

மனிதனை மனிதனாக அங்கீகரிக்கும் முதற் பட்டய ‘சிாக விளங்கவல்லது அவனுடைய மனிதாபிமானம்!

ஆம்; இந்த மனிதாபிமானம் எனும் மகாசக்திதான் தூய்மையின் உருக்கொண்டு அம்பலத்தரசனை ஒருபடி உயர்த்திக் காட்டிவிட்டது. விதி எனும் தீக்குளிப்பில் மூழ்கி எழுந்த அவன் இப்போது புது மனிதனாகவே உருமாறி விட்டிருந்தான். அவனது மனிதத் தன்மையின் அந்தப் புது உணர்வும் புதுச் சக்தியும் தான் ஊர்வசியை ஏற்றுக் கொண்டு அவனை வாழ்த்தும் கடமைத் தெம்பை அவனுக்கு நல்கின. அதன் காரணமாகவே அவன் கோழையாகவும் ஆகவில்லை; வேடதாரியாகவும் ஆகவில்லை, அதன் விளை வாகவே, ஊர்வசிக்கு வாய்த்த களங்கத்தையும் தானே வலிய ஏற்றுக் கொள்ளவும் துணிந்தான். விஷத்தை தன் கண்டத்தில் தாங்கிக் கொண்ட ஐயனைப் போலே!

மனம் ஓர் ஆழி. செஞ்சில் அலைகள் ஆர்ப்பரித்தன.

.."என்னை யார் வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும், என் ஊர்வசியும் என் மகாத்மாவும் கட்டாயம் என்னை வாழ்த்துவார்கள் அது போதும் எனக்கு - இந்த ஒர் அமைதியே அறமாகத் தோன்றியது அவனுக்கு.

‘நான் நல்லவன் இல்லை. என் பருவ இச்சையைத் தணிக்க இரண்டொரு விலை மாதர்கள் நேற்றுவரை காத் திருந்து வந்திருக்கிறார்கள். நான் நேற்று வரை நல்ல வனாக இருந்தது இல்லைதான். ஆனாலும் என்னை நம்ப ஒரு பெண் துணிந்தாள். அத்துணிவில் தான் என்னை நாடி வந்தாள் ஊர்வசி. கெடுக்கப்பட்ட நிலையில் தான்