பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i H2

படுத்தி வைக்க வேண்டும். இனி, எனக்கு என் குடும்பத் தைப்பற்றியும், ஊர்வசியின் குடும்பத்தைப் பற்றியும் தான் கவலை. ஊர் வாய்க்கு மூடி ஏது ? ஊர்வசிக்கு புனர்ஜென்மம் கொடுத்துவிட்டேன் அவளுக்குப் புது வாழ்வு கொடுக்கப் போகிறேன் ! இனி நான் நல்லவன் நல்லவனாகவே இனிமேல் இருப்பேன். இனி எனக்கு வாழ்வு ஊர்வசியேதான் !’

எண்ணங்கள் ஒடி நிலைத்தன. அவ்வுணர்ச்சிச் சுழலில் அவனது கவிதை மனம் விழிப்புக்கொண்டது. தொடக் கமே, அழகிய கவிதையாக வழியத் தலைப்பட்டது. ஊர்வசியின் சிரிப்பு அவன் மனத்தில் சிற்றலை எழுப்பியது. தன்னை மறந்தான்.

அப்போது,

என்ன தீவிரமான சிந்தனையிலே லகிச்சுட்டீங்களே மிஸ்டர் அம்பலத்தரசன் ? பாலன்ஸ் ஷீட்டை பூராவும் டைப் செய்திட்டு பாக்கிச் சிந்தனையைத் தொடாக் கூடாதா? என்று வருந்தினார் முதலாளி. இரும்புக் கடை யில் வழங்கிய மனிதர் அவர். செம்பு தாஸ் தெருவில் பழம் தின்று கொட்டை போட்டவர். அவர் தின்று போட்ட கொட்டைதான் இப்படி இரும்புக் கடையாக உருமாறி விட்டதோ என்னவோ ? r

“மன்னிச்சிடுங்க என்னை. ஏதோ சிந்தனை 1’ என்று தன் தவற்றை உணர்ந்து ஒப்புதல் தெரிவித்த நிம்மதி யுடன், ‘ரெமிங்க்டனைச் சரணடைந்தான் அவன்.

- சாவி கொடுக்கப்பட்ட காலக் கடிகாரம் ஒழுக்கம் கெடாமல் பணி இயற்றுவதே ஒரு விந்தைதான் !

பாலன்ஸ் ஷீட் மூன்றாம் தடவைதான் உருப்படியாக உருப்பெற்றது. -