பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

நான் நடித்த முதல் நாடகத்துக்குத் தலைமை தாங் கினிர்கள் நீங்கள், வழுக்கி விழுந்தவளாக நான் நாடகத் தில் நடித்த போது, கற்பு நிலை தவறிய என்னை-நாடகத் தில் அவ்வாறு ஆக்கப்பட்ட என்னை - நாடகத்தில் ஏற்றுக் கொள்ள முன்வந்த கதாசிரியரின் சமூகப் பணிச் சீர்திருத் தத்தைத் தாங்கள் வெகுவாகப் பாராட்டினிர்கள். இம் மாதிரி விதிவசத்தால் கெட்டநிலை அடைந்த அபலை களைச் செயல் முறையிலும் ஆதரிக்கும் நிலை வளர வேண்டும் எனவும் தாங்கள் காந்திஜீயின் உரையை உதாரணம் காட்டிப் பேசினர்கள்.

அந்தப் பேச்சு என் நெஞ்சத்தைத் தொட்டது. அப் போதே தாங்கள் என் நெஞ்சில் இடம் பெற்றுவிட்டீர்கள். உங்களை ஒரு முறை அப்புறம் வழியில் சந்தித்து என் இல்லத்துக்கு அழைத்து வந்தபோதே, என் இதயத்தைத் தங்களிடம் திறந்து காட்ட வேண்டுமென்று துடித்தேன். ஏதோ ஒன்று அப்போது தடுத்துவிட்டது. அதற்குப் பெயர்தான் விதியோ ?

இப்போது தான் என்னுடைய அந்தக் கனவு பலித மடைந்திருக்கிறது.

நான் மோசம் போன அபாக்கியவதி சாகத்தான், இருந்தேன். ஆனால் என் அன்னையின் நினைவும் ஏமாற்றப்பட்ட என் பெண்மையின் வெஞ்சினமும் என் னைச் சாக அனுமதிக்க மறுத்தன.

நாடகம் முடிந்தது.

என் நாடகக் கோலத்தை அழித்துக் கொண்டிருந் தேன் நான். என் சொந்த உடைகளைத் தரித்துக் கொண்டு புறப்பட ஆயத்தப்பட்டேன். அப்போது நல்லவன் ஒருவன் - அக்கணம் வரை நல்லவனாகவே