பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 i3

அறையைத் திறந்து வந்து சோபாவில் சாய்ந்தான் அவன். அறையைச் சுற்றிச் சூழக் கண்ணோட்டமிட்டான் ஊர்வசி இல்லாத அறை வெறிச்சோடிக் கிடப்பதாகவே அவனுக்குத் தோ ற் ற ம வளி த் த து அந்தினைவு அவன் இதயத்தை என்னவோ செய்தது வேதனை சாடியது மனத்தை வெய்துயிர்ப்பு விளைந்தது

அலுவல் முடிந்த கையோடு ஊர்வசியின் இல்லத்துக்குச் சென்று திரும்ப வேண்டுமென்றுதான் நினைத்திருந்தான் அவன். ஆனால், அறைக்கு வரவேண்டி வந்தது. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. அவனது உற்ற நண்பனான பூமி நாதன் இங்கு மாலையில் வருவதாகத் தொலைபேசி மூலம் அறிவித்திருந்தான். இச் செய்தியை அவனுக்குச் சொல்லவும் அவன் அலுவல் மனை உதவியது.

காலையில் ஊர்வசியின் வீட்டில் நடந்த ராஜோப சாரத்தை நினைத்தான் அந்நினைவில் புத்துருக்கு நெய் மணத்தது; சீரகச் சம்பா இட்டிலியும் புதினாத் துகையலும் சுவை கூட்டின. அத்துடன் ஊர்வசியின் கொள்ளை அன் பும் அவன் மனத்தைக் கொள்ளை கொண்டது. மதியச் சாப்பாட்டையும் அலுவல் பார்க்கும் இடத்துக்கு அனுப்பி வைப்பதாக மன்றாடினாள் மீனாட்சி அம்மாள். ஆவணி பிறந்து அப்படிச் செய்து கொள்வதே உசிதமென்று சொல்லி விட்டான் அவன்.

சட்டையைக் கழற்றிப் போட்டான் அம்பலத்தரசன், சட்டைப் பையில் இருந்த ஊர்வசியின் கடிதத்தை மறந்து விடாமல் தோல் பெட்டியின் அடியில் வைத்துவிட்டு மூடப் போன சமயத்தில் மேலே தெரிந்த புகைப்படத்தைக் கண் டான். அதை எடுத்துப் பார்க்க நினைத்தவன், அவ்வாறு செய்யாமல். அதைப் பெட்டியின் அடியில் போட்டு வைத்