பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120


மிருகத்துக்குப் பயந்தொடுங்கிப் போய் விட்டாயோ? நீ வெறும் கல்தான் என்று அந்தப் பாவி நினைத்துத்தான் என்னைப் பழிகாரியாக்கி விட்டான்! ஆமாம், எனக்கு நீ இனி காப்புத் தரவேண்டாம் அந்தக் காப்பும் இனி எனக்குத் துச்சம்! என்னைக் காக்க கடல் இருக்கிறது! 'எனறு வசனம் பேசி, கடலை நாடி ஒடும் கட்டமும் ஊர்வசிக்குச் சிறப்பை நல்கும்.

கதாசிரியருக்கு ஒரு யோசனை.

அநீதியான முறையிலே கற்பழிக்கப்பட்ட பெண் களுக்குக் கடலைத்தான் முடிவாகக் காட்ட வேண்டுமா? அவர். இம்மாதிரியான கதை, சிருஷ்டியின் தத்துவத்திற்கே சோதனையாகி விடாதா? படைக்கப்படும் உயிர்கள் வாழ் வதற்காகவே படைக்கப்பட்டவை, இதுதான் உயிரின் தத் துவப் பொருள்! இதை மறந்தார் கதாசிரியர்! இம்மாதிரி யான அபலைகள் இம்மாதிரியான அவல நிலைக்கு ஆளாகும் ஆளாக்கப்படும் முடிவுகள் கைவிடப்படவேண்டும். அப் பொழுதுதான் வாழ்க்கைக்குரிய உள்நோக்கம் நிறை வேறும். 'வாழ்வதற்கே' என்ற நாடகத் தலைப்பும் சிறப் புறும் வாழ்க்கை வாழ்வதற்குதான்! வாழ்வதற்கேதான்!

அடுத்தப்படியாக நம் கவனத்தைக் கவர்கிறார் வில் லனாக-அபலையைக் கற்பழிக்கும் பாத்திரம் ஏந்திய தீக் குணனாக நடித்த பூமிநாதன் அவர் சாகலமாக நடித் தார் சாகஸ்த்தையே பிறப்புரிமையாகக் கொண்ட பாங் கில் அவரது நடிப்பு இருந்தது. மனிதனுள்ளே மிருகமும் வாசம் செய்யும் என்னும் உட்கருத்தைச் செம்மைப் படவே நிரூபணம் செய்து காட்டி விட்டார் அந்த அன்பர்.

நாயகனாக நடித்தவர் நம் அனுதாபத்துக்குரியவர்.

விதியைச் சாடும் நெஞ்சுரம் உள்ளவன்தான் காதல் எனும் புனித வலையையும் விரிக்கத் தகுதி பெற முடியும்.