பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121

தியாகம் என்கிற திறனும் எல்லோருக்கும் வந்துவிடாது காதலித்தவளைக் கைவிட்டுவிடும் பத்தாம் பசலியாகக் காட்சி தரும் அவர் அழகனாக மட்டுமே தோன்றுகிறார். கோழையாகவே நாம் அவரை மதிப்பிடுகிறோம். கோழை களுக்கு வாழ்வே இல்லை!வேடதாரிகளுக்கும் வாழ்வு இல்லை!

எந்த ஒரு நிலையிலும், எந்த ஒர் அபவாதத்தையும் ஏற்க - அப்படி ஏற்பதால் இன்னொரு ஜீவனுக்கு வாழ்வு கொடுக்க முடியுமென்கிற புண்ணியக் கடமை காத்திருக்கு மென்று தோன்றினால், அத்தகைய அவதுாறை ஏற்கச் சித்தமாக இருக்கவேண்டும், ம னிதன்! அதுவேதான் நாகரிகமான சமுதாயத் தொண்டாக ஆகமுடியும்! தமிழ்ப் பண்பாட்டுக்கு இந்நிலை மூலம் ஒரு புதிய பொருளும் கிடைக்குமல்லவா?

இக்கருத்தைச் செயல்படுத்த இக்கதாசிரியர் இனி யேனும் முயல்வாராக!”

விமரிசனம் முடிந்தது.

மின்விசைப் பொத்தான் விளக்கை ஏற்றியது.

கையெடுத்துக் கும்பிட்டான் அம்பலத்தரசன். ஊர்வசி யின் அழகிய நிர்மலமான முகம் அவனது மனத்தின் கண்களில் நிழலாட்டம் போட்டது. தன்னை மறந்து இரவு துரங்கிய அந்தப் புனித எழிலை அவனால் எப்படி மறக்கக் கூடும்?

படுத்தவன். தூக்கம் பிடிக்காமல் எழுந்தபோது அவள் அலங்கோலமான உறக்கத்தில் கட்டுண்டிருந்தாள் மார்பகத்திலே காணப்பட்ட நகத்தழும்புகள் அவன் நோக்கில்பட்டன, ஒருகணம் அவன் கலங்கினான். ஆனால் மறுகணம், அவனது மனத்தின் ஒரு முடுக்கில் வாசம் செய்த பழைய மிருகவெறி கிளர்ந்தெழுந்தது. அவளையே