பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130


வாழ்க்கை எனும் சதுரங்க ஆட்டத்திலே - எங்களையும் மீறி, விதியோ அல்லது தெய்வமோ வெல்லும் ஒரு முடிவை நான் உண்டாக்கிக் கொடுத்திட மாட்டேன்.

ஊர்வசியைப் பற்றித்தான் சிக்கலே இல்லையே! அவள் என்னுள் இணைந்த உயிராக ஆகி விட்டாளே! அவளுடைய திடசித்தமும் வைராக்கியக் குறிக்கோளும் உலகினைச் சாடும் நேர்மைத் திறனும் யாருக்கு வரும்? ஆமாம் ஆவணி பிறந்து ஒரு முகூர்த்தத்தில் அவள் கழுத்தில் மூன்று முடிச்சுகளை நான் இட்டு விடவேண்டும் அப்போது தான் அவளுக்கு நல்லமூச்சு வரும். அவள் நம்பியுள்ள என்னுடைய மனிதாபிமானமும் மனிதத் தன்மையும் நல்ல மூச்சு விடும்.

‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற புதிய தத்துவத் துக்கு அப்போதுதான் புதிய அ ர் த் த மு ம் உண்டாக முடியும்-எங்கள் இருவர் வ ைர யி லு ம்! எங்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது என்னும் புரட்சி முடிவை அப்போது தான் இந்த விந்தை உலகம் அங்கீகரிக்கவும் செய்யும்:

சிகரெட்டின் எரிந்த சாம்பல் துகள்கள் காற்றில் மிதந்தன.

அம்பலத்தரசன் நடந்தான். பிரபாத் டாக்கீஸில் புரட்சி நடிகரின் சிரிப்பை ரசித்துவிட்டு, எதிர்த் தெருவில் மடங்கினான்,

புரட்சி என்றால் அதன் வசிகரமே அலாதிதானோ?

அப்போது, “ஹல்லோ..” என்ற பழகிய குரல் கேட் கவே, திரும்பிப் பார்த்தான் அம்பலத்தரசன். அழைத் தவன் பழக்கமானவன். லாம்ப்ரெட்டாவில் வீற்றிருந் தான்’ அவன். கருணாநிதி என்று பெயர் மேல்மட்டப் பிள்ளை. அவனுக்கு உத்தியோகம், பொழுதைக் கழிப்பது, அதாவது பொன்னான காலத்தைத் கொல்வது. அவன் கண்டனுபவிக்காத பொன்னா, என்ன ?