பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

“உங்க ட்ராமா ரெவ்யூ ரொம்ப நேர்த்தியாய் இருந் திச்சு, அம்பலத்தரசன்!” என்றான் கருணாநிதி.

"ரொம்ப சந்தோஷம், கருணாநிதி" என்றான் அம்பலத்தரசன். ஆனால் அவன் மகிழ்ச்சியடையவில்லை. மாறாக ஒரு வகை அருவருப்புத் தோன்றியது அவனுடைய முகத்திலே!

"ஆனால் ஒரு சந்தேகம்", மிஸ்டர் அம்பலத்தரசன்

"சொல்லலாமே!"

“ஊர்வசி கற்பழிக்கப்படுகிறாள்..." என்று கருணாநிதி எடுத்த எடுப்பில் பேச்சைத் தொடங்கவே, அம்பலத்தரச னுக்கு அப்பேச்சைக் கேட்டதும், பிரமிப்பு உண்டாகி விட்டது உடனே சமாளித்துக் கொண்டான்.

“அதாவது நீங்க நாடகத்தைப் பற்றிப் பேசுறீங்க, இல்லையா?" என்று குறுக்கிட்டான்; நினைவூட்டினான்.

"ஓ மை குட்னஸ்! ஆமாம் நாடகத்திலே அந்தப் பெண் கற்பழிக்கப்பட்டதைப் பார்த்த ஞாபகத்திலே, அந்தப் பெண்ணோட அசல் பெயரையே சொல்லிட்டேன். பரவாயில்லை! உம், நாடகக் கதாநாயகி பலாத்காரமாகக் கற்பழிக்கப்படுகிறாள்!சரி அவள் தன்னுணர்வு அடைஞ்சதும் உடனே அவள் அலைகடலை, நாடிச் சரணடைகிறாள்! இது கதையோட நாடக முடிவு, ஆனாஇந்த முடிவு நம்மோட தமிழ்ப் பண்பாட்டை ஒட்டி அமைஞ்சிருந்திச்சு இது தான் நடக்க வேண்டியது, இல்லீங்களா?

ஆனால், நீங்க இந்த முடிவை ஆதரிக்கலே. அப்படித் தான் உங்க க்ரிட்டிஸ்ஸமும் அமைஞ்சிருந்திச்சு. நீங்க சொல்லுற அந்த முடிவுப்படி அந்த நாடகம் முடிஞ்சிருந்