பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133


“கற்புநிலை தவறிய அந்நிலைக்குப் பலாத்காரமாக ஆளாக்கப்பட்ட அந்தப் பட்ட அந்தப் பெண், செத்தால் கூட மறையமுடியாத அந்தப் பெயரோடே வாழ்ந்தால் மட்டும் என்ன குடி முழுகிப் போயிடும்? சொல்லுங்க கருணாநிதி, சொல்லுங்க” என்று உணர்வு சுழிப்புடன் பேசினான் அம்பலத்தரசன்.

‘அவளை உலகம் தூற்றாதா ?”

  • உலகம் யாரைத்தாள், எப்போதுதான் துரற்ற வில்லை ?’’

“அப்படின்னா கெட்ட பெண்களுக்கு இந்த லோகத் திலே இடம் உண்டுன்னு வாதாடுறீங்களா அம்பலத்தரசன்’’.

கெட்ட பெண்களுக்கல்ல, தங்களையும் மீறிக் கெடுக்கப்பட்ட பெண்களுக்கு இந்த உலகத்திலே தாராள மாக இடம் உண்டு. இதுதான் என் வாதம் கெட்ட பண்புகளைப் பத்திய பிரச்சனையை நாம் இப்போது பேச வேண்டியதில்லை அது ஒரு தனி உலகம் ! இப்போ நான் பேசுறது பிறராலே வலுக்கட்டாயமாகக் கற்பழிக்கப்பட்ட அபலைப் பெண்களைப் பத்தித்தான் ! அத்தகைய பெண் களை ஆதரிக்க நம் தமிழ்ப் பண்பாடு பழகிக்கிட வேணும் ! உண்மையான உள்ளம் கொண்டவங்களும் நமக்கு முன்னே இந்தப் புரட்சியைத்தான். உண்டாக்கிக் காட்டி நிரூபிச்சும் காட்டியிருக்காங்க !

‘அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லே'ன்னு சொல்லி யிருக்கார் வள்ளுவர். அவர் வாக்கு, நான் சொல்லுற இத்தப் புதுக்கருத்துக்கும் சாட்சியாக அமையட்டுமே பிறப்பு என்கிறது ஒரு கடமை. அந்தக் கடமையோடு