பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137


ணோட சாபம்தான் இப்போது என் ரூபத்திலே வந்து உன்னை முச்சந்தியிலே பழி வாங்கியிருக்குது! தெய்வத் துக்கும் மனச்சாட்சிக்கும் பயப்படத் பழகாதவன் கதி இது தான்! ஒடு! ஒடிப்போய் உன் பணப் பெட்டியைத் தஞ்சம் அடை! உன் பணம் என்னை என்ன செய்கிறதின்னு பார்க் கிறேன்! ஊம், ஒடு! ’ என்று ஆவேசமாகக் கூச்சலிட்டான் அம்பலத்தரசன்.

ஒருகணம், கருணாநிதி தலை குனிந்தான்!...

அடுத்த கணம் அவனுடைய பற்கள் நறநற வென்று சத்தமிட்டன. மூன்றாவது கணத்தில் கருணநிதியின் லாம்ப் ரெட்டா காரினும் கடிது சென்றது : ..

அம்பலத்தரசன் முகத்தை துடைத்துக்கொண்டு, சிக ரெட்டை எரியவிட்டவண்ணம் நகரலானான்.

அப்போது ரிக்ஷாவாலா ஒருவன் அம்பலத்தரசனிடம் ஒடி வந்து, ஷார்! நீங்கள்தான் தெய்வம்.சாமி” என்று உருக்கத்தோடு புகழ்ந்தான்.

அம்பலத்தரன் அந்த ஏழையைப் பார்த்தான். ‘ஐயா, அதோ இருக்குது தெய்வம்!” என்று சொல்லி, கவனிப்பா ரற்றுக் கிடந்த அந்தப் பாழடைந்த கோயிலைச் சுட்டிக் காட்டினான்.

‘பெர்க்லி தலையை நீட்டியது.

உடன் வரும்படி ஊர்வசி வேண்டிக்கொண்டதற்கா இந்தச் சோதனை ?

சோதனையா இது! ஆம், கருணாநிதிக்கு இது சோதனை! ஆனால், இது என்னுடைய கடமையின் சாதனை அல்லவா?... -