பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 41

மறக்கத்தக்க சலனமல்ல அது மறக்கக்கூடிய சலனமும் அல்லவே ! .

உட்கார், ஊர்வசி !’

அவள் மீண்டும் அமைதி பெற்றாள். ஆனாலும் அவளது நெற்றிச் சுருக்கங்கள் மாத்திரம் கூடி நின்றன. மண்டை உள்ளவரை சிந்தனைக்கு ஒய்வேது ?

அவன் உட்கார்ந்த பிறகு அவள் உட்கார்ந்தாள். சின்னாளப்பட்டிக் கோர்வைச் சேலை அவள் அழகைக் கூட்டியது. இரும்புத் திரை’ ரவிக்கைக்கும் ஊதாவர்ணப் புடவைக்கும் கனபொருத்தம் உள்பாவடையின் பிசிறு அவளது பாதச் சிவப்பை மறைத்தது.

‘வந்த உங்களை உட்காரச்கூடச் சொல்ல ஞாபகமில் லாமல் நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டு இருந்திட்டேன்.”

‘அதனாலே என்ன ? என் அறையிலே நீ எனக்கு உபசாரம் செஞ்சே நேற்று ராத்திரி. இன்னக்கி ராத்திரி உன் வீட்டிலே நான் உன்னை உபசாரம் செஞ்சிட்டேன், இதெல்லாம் சர்வ சகஜந்தானே !’

அவன் சிரிக்க, அவள் சிரித்தாள்.

நினைவோடு அவளிடம் சொல்ல வேண்டுமென்று. நினைத்துக் கொண்டிருந்தவன் போல, ‘பாவமன்னிப்புப் பெற வேண்டிய கட்டம் ஒண்ணு மிச்சமிருக்குது என்று ஆரம்பித்தான் அம்பலத்தரசன்.

அவனைத் திகிலுடன் நிமிர்ந்து பார்த்தாள் ஊர்வசி மாரகச் சேலையை ஒழுங்குப்படுத்திக் கொண்டு, பாவ மன்னிப்பா ? ஆமாங்க பாவமன்னிப்புப் பிரார்த்த னையை என் ஆண்டவனான கடவுள் கிட்டேயும் என்னை. ஆண்டவரான உங்க கிட்டேயும் மான சீகமாய் அப்பவே செஞ்சிட்டேனே’ என்றாள்.