பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$42

நான் குறிப்பிட்டது, நான் செய்துக்க வேண்டிய பாவமன்னிப்புப் பிரார்த்தனையாக்கும் !’.

“என்ன சொல் lங்க நீங்க ?’.

“நான்ஒண்ணும் சொல்லலே இனிமேல் தான் சொல் லப் போறேன், அதையும் சொல்லிடுறேன், அப்பத்தான் என் மனசாட்சி எனக்குப் பாவமன்னிப்பு வழங்கும், ஊர்வசி நான் பாவி!”

‘பாவியா ? நீங்களா பாவி அத்தான் ?”

“அமாம், நானேதான் பாவி! உன்னை நேத்து ராத்திரி சந்திக்கிற மட்டுக்கும் என் பாவச் சுமையை நானேதான் சுமந்துக்கிட்டு, போலியாய் இருந்து வந்தேன். சருக்கமாக சொல்லிடுகிறேன். தங்களுக்கு விதிச்சிட்ட தலையெழுத் துப்படி வாழ்வைக் கழிச்ச இரண்டொரு விலைமாதர் களோடே எ ன க் கு ம் தொடர்பிருந்து வந்திச்சு. என் பருவக் கோளாறு செஞ்ச சூது அது. நான் செஞ்ச பாவம் அது.

உன்னைச் சந்திக்காமல் இருந்திருந்தா, இன்னமும் அந்தப் பா வ ம் என்னைத் தொடர்ந்துக்கிட்டுத்தான் இருக்கும். இப்போ அந்தக் கெட்ட ஞாபகமே என்னை விட்டு அஞ்சி ஒடிட்டுது : ... உன்னைச் சந்திச்ச வேளை யோட மகிமை இது இதுதான் உண்மையுங்கூட 1சத்தியமாச் சொல்லுறேன் இனி நான் உன்னைத் தவிர வேறெந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன் -இது சத்தியம் இந்த நடப்புகளை உங்ககிட்டே சொல்லி பாவமன்னிப்பு வாங்கிக்கிட வேணும்னுதான் ஞாபகமாக நினைச்சுக்கிட்டே வந்தேன் !...”

அவன் முடித்தான், ஆனால் கண்ணிர் முடியவில்லை.

“அத்தான். உங்களோடே இந்த மனசு யாருக்கும் வராதுங்க-!’ அவளும் கலங்கினாள்.