பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 46

ஊர்வசி தடுமாறினாள்.

ஐந்தாறு நிமிஷங்கள் சென்ற பின்னரே, மீனாட்சி அம்மாள் வந்தாள். வந்தவள். ஹார்லிக்ஸ் கலந்திருந்த தம்பளரை மங்கையர்க்கரசிக்குக் கொடுத்தாள். காப்பித் தம்பளரை அம்பலத்தரசனிடம் சமர்ப்பித்தாள்.

ரெண்டு பேரும் சாப்பிடுங்க’ என்று உபசரித்தாள் ஊர்வசி

“தங்கச்சிக்கு ’’ என்று கேட்டாள் மங்கையர்க்கரசி,

நான் கொடுக்க மாட்டேனா ?’ என்று உரிமை பற்றினான் அம்பலத்தரசன்.

பாதிக் காப்பி - மீதிக் காப்பி ஊர்வசிக்குக் கிடைத்து விட்டது.

அம்பலத்தரசன் பொய் சொல்வானா?

‘அக்கா இங்கேயே தங்கட்டும்’ என்றாள் ஊர்வசி வேணாம் மங்கையர்க்கரசியை தங்கசாலையிலே எனக்குத் தெரிஞ்ச டாக்டரம்மாளோட நர்ஸிங் ஹோமிலே சேர்த்திட்டு வந்திடுறேன். அதுதான் நல்லது” என்று எழுந்தான் அவன் ; எ ழு ந் து, நடந்து ; மீண்டும் திரும்பினான். டாக்சியில் திரும்பினான் அவன்.

மங்கையர்க்கரசியைப் பதனமாக வாடகைக் காரில் ஏற்றி விட்டார்கள், தாயும் மகளும்.

கையெடுத்துக் கும்பிட்டு விடைபெற்றாள் மங்கையர்க் கரசி. கண்முனைக் கசிவு நிற்கவில்லை.

‘போய் வருறறேன் ஊர்வசி, உன்கிட்டே நிரம்பப் பேச வேணும்’ என்றான் அம்பலத்தரசன்.

“சரிங்க ராத்திரி சாப்பாடு இங்கேதான். சீக்கிாம்.