பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


[2]

ட்டிக்குச்சு

கொள்ளை, கொள்ளையாகப் பணம் இருந்தும்கூட மனம் கொள்ளை கொள்ளத் தக்க கருணை இல்லாத மேட்டுக்குடிச் சமூகத் துரோகியை ஞாபகபடுத்தும் போக் கில், மிகமிகப் போலித்தனமான பெரிய மனிதத் தனத் தோடு எரிந்து கொண்டிருந்தது சிம்மினி விளக்கு.

பூசாரிச் சாம்பான், கம்மாய்த் தண்ணீரின் அடியில் பதுங்கிப் பதுங்கிச் சுழித்திடும் சுழல்மாதிரி, உள்ளுக் குள்ளேயே மனம் .வெதும்பிக் கொண்டிருக்கிறார், இன்னமும்! உலகத்துக்கே மூல முதற்பொருளாக விளங்கிய -விளங்குகிற ஆத்தாளை நினைத்த நெஞ்சாலேயே, அம்மன் சந்நிதானத்தில் கண்ணிரும் கம்பலையுமாக அபலைக் கோலத்தில் காட்சியளித்த தெய்வானையையும் நினைத்தார், நினைத்த நெஞ்சம் மட்டுமல்லாமல், நினைக்காத உடம்பும் நடுங்கத் தொடங்கியது! - 'ஆத்தாளே! இம்மாம் காலமாய் நான் அனுபவிச்சறியாத ஒரு கவுரப் பிரச்சினை இப்ப எனக்கு ஏற்பட்டிருக்குதே ? இந்த இடுசாமச்துப்பு ஊருக்கு ஒசந்த ஒனக்கா தெரியாது? பின்னே, ஏன், இப்படி அந்த அப்பாவிப் பொண்ணு தெய்வானையை அலங்கோலமான நிலைமைக்கு ஆளாக் கிட்டே? போன ஆவணிக் கெடுவிலே, உன்னைச் சாட்சி வச்சுத்தானே, இந்தப் பறச்சேரியே வாயைப் பிளந்து அதிசயப் படும்படியான விதத்திலே, தெய்வானைவேலாயுதம் கண்ணாலத்தை தெய்வத்துக்குச் சம்மதமான ஒரு நல்ல தீர்ப்பு சொல்லி நானே முன்னே நின்னு நடத்தி வச்சேன்! மறுதக்கமும், அத்தக் குடிகார வேதாயம் முருங்கைப் போத்திலே ஏறிக் குந்திக்கிடுச்சுப் போலே?"