பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153


“உங்க கொள்கையும் மெய்தானுங்க, அத்தான்!”

அவன் வெங்காயத் தயிர்ச் சட்டினியில் மிச்சமிருந்தக் கரித்துணுக்குகளைத் தோய்த்துச் சாப்பிட்டான். எலும்புத் துணுக்குகள் ஒதுங்கின. எலுமிச்சம் பழத்துண்டைச் சப்பித் துப்பினான். குவளைத் தண்ணிர் காலி!

அவள் எழுந்து முதலில் கையலம்பினாள். அவனுக்குத் தண்ணிர் கொடுத்தாள்.

அவன் கையை டவலினால் துடைத்துக்கொண்டு உட் கார்ந்தான்.

ரேடியோவின் வீணா கானம் அதியற்புதமாகப் பரி மளித்தது ஹம்ஸத்வனி ஆயிற்றே !

கலையுணர்வின் பரிணாமத்தால் நிறைவெய்தினான் அம்பலத்தரசன்.

அம்பலத்தரசன் தன் சட்டைப் பையில் கையை விட் டான் அப்போது, ஊர்வசியின் கடிதம் கைவிரல் ஸ்பரிசத் தில் தட்டுப்பட்டது. தன் நெற்றியில் அவன் நேற்றிரவு தலைவலி மருந்தைத் தடவியபோது, அவள் கைபட்டவுடன் நான் அனுபவித்த அந்த ஸ்பரிச சுகம் மீண்டும் புனர் ஜன்மம் எடுத்திருக்க வேண்டும். இமை கொட்டும் நேரம் அவன் அந்தக் ககத்தில் திளைத்திருந்தான். சுய சிந்தனை சிலிர்த்தது.

“ஊர்வசி, உன் லெட்டரைப் படிச்சுப் பார்த்தேன். உன் கடிதத்தை அப்படியே நான் அங்கீகரிக்கிறேன். உன்னையே அங்கீகரித்துக் கொண்டவன் அல்லவா நான்...’ என்று “தீர்ப்பு வழங்கினான் அம்பலத்தரசன், அவளை உன்னிப் பாகப் பார்வையிட்டான்.

‘என் உயிர் உடலிலே தரித்திருக்கும்வரை, என் உருயிக்கு நீதான் மூச்சு, ஊர்வசி!” -