பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155


நேற்றிரவு அவர்கள் இருவரும் கண்ணுறங்கிய அந்தப் புனிதப் பொழுது, அவர்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் நிழல் ஆடிக்காட்டியதோ ?

‘போய் வரட்டுமா?

‘போய் வாருங்கள்!’

‘நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. நீ என் அறைப்பக்கம் வாயேன், பேசிக் கொண்டிருப்போம்!”

‘உத்தரவு, டியர்’

உதட்டுப் புன்னகையைக் கண்கள் ஏந்தின.

கண்களின் புன்னகையை உதடுகள் ஏந்தின.

பர்மா ஸ்லிப்பர்கள் மறையத் தொடங்கிப் பத்து நிமிஷங்கள் ஆகியிருக்கும் !

[15]

விடிந்தது - ஞாயிற்றுக்கிழமைப் பொழுது.

தளர்ந்து வந்த கோடையின் புலரியில் துயிலெழுந்து, பல் துலக்கிக் காப்பி சாப்பிட்டு விட்டு, அந்தச் சூட்டோடு காலைச் செய்திகளையும் நெஞ்சிலேற்றிக் கொண்டு, குளித்து, புத்துடை தரித்துப் புறப்பட்டான் அம்பலத்தரசன் பக்தி சிரத்தையுடன் காளிகாம்பிகை - காமடேஸ்வரர் தரிசனத்தை முடித்தான். எங்கள் வாழ்வை நலத்துடன் அமைத்துக் கொடுங்க!’ என்று ஜோடித் தெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டான். . . . . . --

தானும் ஊர்வசியும் தொடங்க விருக்கின்ற அந்தப் புது மண வாழ்வின் தாம்பத்தியம் சிறக்க வேண்டுமென்ற தவிப் புடன் அஞ்சலி செலுத்தி, அந்த அஞ்சலியில் தன் பிரார்த் தனை ஈடேறிவிடுமென்ற தன்னம்பிக்கையைப் பெற்றுத்