பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156


திரும்பி நடந்தான். புதிதாக உருவாகி வளர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த உறவும் பாசமும், துடிப்புமும் கடமையும் அவனைப் புதுப்புதுப் புவனத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தன. வாழ்க்கையின் பால் அவனுக்கு இருந்த ஆர்வமும் கவலையும் அவன் மனத்தைப் பண்படுத்திப் பக்குவப்படுத்திக் கொண்டிருந்தது.

முதற் பிரார்த்தனைக்குரிய மணி அருகிலிருந்த புனித மேரி மாதா கோவிலிலிருந்து ஒலித்தது.

அம்பலத்தரசன் இடது புறமாக மடங்கினான். தொப்பிக்காரச் சாய்பு ஒருவர் பாதங்களில் கொதி எண்ணெயை ஊற்றிக் கொண்டிருப்பவர் போன்று வேர்க்க விறு விறுக்க எங்கோ விரைந்தார்.

நல்ல வேவை, அவர் பேரில் அவன் மோதிடவில்லை. விலகிக் கொன டான். கையோடு கை இணைத்து ஒயிலாடிக் கொண்டே சென்ற புது ஆங்கிலத் தம்பதி அவன் மீது மோதி விடவில்லை தன் காதலியைக் கெட்டிக்காரத் தனமான காதலால் கட்டுண்டு கடைபிடித்துச் சென்றான் காதலன். புதிய காதல் உறவு இணைத்த புது இணையாக அவர்கள் இருக்கலாம். அடுத்த விபத்தையும் சமாளித்த படி அவன் ஹோட்டலைக் குறிவைத்து நடந்தான்.

ஹோட்டல் வாசலில் பிச்சைக்காரி ஒருத்தி தன் பிள்ளைக்குப் பால் .ெ கா டு த் து க் கொண்டிருந்தாள் தன்னைக் கண்டதும், “தரும தொரையே !’ என்று பல்லை இளித்தாள் ; அவளுக்கு விளம்பரப் பல்பொடியின் அருமை தெரியாது போலும் ! அவன் சிரித்துக் கொண்டே ஒரு பைசாவை அந்தத் தாய்க்குப் போட்டான். வெறிநாய் ஒன்று விழுந்தடித்துக் கொண்டு தலை தெறிக்க ஓடியது. அவன் சுற்றிலும் ஒரு முறை கண்ணோட்டம் பதித்தான். ‘மனிதர்களிலே வெறியர்களைத் தடம் கண்டு கொள்வது இயலாத காரியம் போலிருக்கிறதே ?