பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157


ராமபவன் இட்டிவி என்றால் அம்பலத்தரசனுக்கு ஒரு பிடித்தம். இட்டிலிக்கு ஊற்றப்படும் சட்டினியின் மீதுள்ள பற்றுத்தான் இட்டிலியின் மீதும் அவனுக்கு ஏற்பட்டிருந் தது. சாப்பிட்டு விட்டுத் திரும்பினான் ; பில்லைக் கொடுத்து விட்டுத்தான் திரும்பினான். பில்"லை மட்டும் வாங்கிக் கொள்ளும் ஹோட்டல் அல்ல அது !.

வெற்றிலைப்பாக்குக் கடைக்கு வந்தான். இதுவும் அவனுக்கு ஒரு வாடிக்கைக் கடை. இலக்கியச் சர்ச்சைக்கு கந்த இடம் அது. அமரர் புதுமைப் பித்தனுக்கு அந்நாளில் இம்மாதிரியான வாடிக்கைக் கடைகள் அதிகம் இருந்ததாக அவன் சொல்லக் கேட்டதுண்டு, கடையின் அதிபர் அந்தக் கடைக்கு வாய்த்த நல்ல விளம்பரம் மனிதர் கும்பகோண்ம் வெற்றிலையைக் காம்புகிள்ளி நரம்பு நீக்கிப் போட்டுக் கொண்டு பன்னீர்ப் புகையிலையை உள்ளடக்கிப் பேசும் பேச்சைப் பார்த்தால், தாம்பூலப்பித்து யாரையும் ஒரு கலக்கு கலக்கியே தீரும், அம்பலத்தாசனும் இப்படிப்பட்ட பழக்கத்துக்கு அடிபணிந்தவன்தான். வெற்றிலை தரித்துக் கொண்டான் அவன். நீட்டப்பட்ட சிகரெட்டை வாங்கிய அவன், ஊ ர் வ. சி யி ன் ஆக்ஞை'யைச் சிந்தையிற் கொண்டதும், அதைத் திருப்பிக் கொடுத்தான். கடைக் காரர் அதிசயம் பூத்தார்.

‘சரி, இந்த வருஷம் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் சார் பிலே தமிழில் சிறந்த நூல்களுக்குப் பரிசளிக்கப்பட்டதே, அதைப் பற்றி இந்தப் பத்திரிகைகக்காரர்கள் அவ்வளவு துரம் உரிய விளம்பரம் கொடுக்கலையே, கவனிச்சிங்களா ஸார் ?” என்று கேட்டார் கடை முதலாளி.

‘வாஸ்தவந்தான். இரண்டொரு ஏடுகள் நல்லமுறை யில் பாராட்டி எழுதின. இரண்டொருவர், கட்டின வீட்டுக்குக் குறை சொல்லவென்று கடுவன் பூனையாட்டம் காத்திருந்து குறை சொல்லவும் தவறவில்லையே அதையும் கவனிச்சிங்களா, சாமிநாதன் ?” x