பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158


“ஆமாம், அதுதான் நம் தமிழ் இலக்கியத்துக்கு ஏற்பட்டு வருகிற ஒரு தலைவலியாச்சே? ... இப்பத்தான் ஞாபகம் வருது தமிழிலே நாடக இலக்கியம் உண்டாக வில்லையாம். ஒரு சாரார் பேசி கொண்டுதானே வரு இறாங்க இவங்களுக்கு நீங்க இன்னும் பலமான ஒரு அடி கொடுக்க வேணுமுங்க, உங்க பூ மூலம் ! தட்டிக் கேட்கிறதுக்கு ஆள் இல்லாட்டா தம்பி சண்டப் பிரசண்டன்னு நம்ம ஜில்லாப் பக்கத்திலே ஒரு பேச்சு உண்டில்லையா ? அதன் பிரகாரம், அப்போதைக்கப் போது, குறை சொல்லுறவங்களுக்கு மண்டையிலே அடிச்சாத்தான் நல்ல புத்தி வரும் ! தமிழிலே நாடக இலக்கிய்ம் தொன்று தொட்டு வளர்ந்து, வாழ்ந்து வருகிற உண்மைப்பத்தி நீங்க எடுத்துச் சொன்னதாகவும், இந்நாளிலே நடத்தப் படும் அமெச்சூர் நாடகங்கள் எத்தனையோ நாடக வளர்ச்சிக்கு, உதவுகிற நடப்பை நீங்கச் சுட்டிச் சொன்ன தாகவும் பூமிநாதன் நேற்றுக் காலம்பற எங்கிட்டே ஞாபகப் படுத்தினார்.

“அப்படியா ? பேஷ் பேஷ் !’

பூமிநாதனின் பெயரைக் கேட்டதும், அவன் தன்னைச் சந்திக்க இரவு வருவதாகத் தெரிவித்து வராமல் போன விவரத்தை அம்பலத்தரசன் எண்ண வேண்டியவன். ஆனான்

“கூடிய சீக்கிரம் உங்க இஷ்டப்படியே ஒரு விமர்சனக் சட்டுரை எழுதிடுறேன். எனக்கும் அந்தத் தூண்டுதல் ரொம்ப நாளாய் இருந்துகிட்டுத்தான் வருது.”

பேஷ் ? செய்யுங்க ... ”

அன்றையக் கணக்கைக் குறித்துக் கொள்ளச் சொல்வி விட்டு நகர்ந்தான் அம்பலத்தரசன் , -

தெருவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன ஆகாயத்தில் விமானம் பறந்தது.