பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160


இப்போதும் நினைக்கத் தவறிவிட வில்லை. அதே தருணத் திலே, ‘பூ’ காரியாலயத்தை விட்டுப் புறப்பட்ட பூமிநாத னின் மார்பில் தெரிந்த அந்த ரத்தத் தழும்பையும் அவன் ஞாபகப்படுத்திக் கொள்ளத் தவறிவிடவில்லை!.

“என் ஊர்வசியைக் கெடுத்த துரோகி யார்? அவனை இன்ம் காண முடிந்தால், என்னுடைய இன்னொரு கடமையும் பூர்த்தியாகி விடுமே! ஊர்வசி இத்தகைய கொடுமைக்கு இலக்காவதற்கு முன் அவளை நான் அடை யும் பாக்கியம் எனக்குக் கிட்டியிருந்தால் ?

உடலைச் சிலுப்பிக் கொண்டு அம்பலத்தரசன் இடம் மாறிக் குந்தினான்.

பால் காய்ந்தால், சுவை கூடும்.

சோதனை கூடினால், மனம் பக்குவ ம ைடயும்!

எண்ணத்தின் சூடு, அவனுள் சுவையான ஓர் ஆரோக் சியத்தைப் பரப்பி விட்டது போலும்!

ஒரேவொரு சிகரெட் தலையை நீட்டி அவனைச் சோதித்தது. நாக்கு ஊறியது, அதைக் கையில் எடுத்தான்.

ஒருமுறை அதை அருவருப்புடன் பார்த்தான்; அடுத்த கணம், அந்தச் சிகரெட்டைக் கசக்கி விட்டெறிந்தான்!

தத்தளிப்பு மாற, தத்தளிப்பை மாற்ற ‘பூ’ இதழின்

மலரொன்றைப் புரட்டினான், புரட்சிக்கு மறுபெயர்

காதல்!” என்ற மட்டும் அவனை வசீகரித்தது புரண்டன ஏடுகள், -

அன்னையின் நினைவு பீறிட்டது. அம்பலத்தரசன் கடிதத் தாளை எடுத்தான். ‘அன்புள்ள அம்மா அவர்களுக்கு,

இவடம் நான். சுகம். இது போல் அவடம் தங்கள் சுகத்துக்கு எழுதவும், தங்கள் கடிதமும், தாங்கள்