பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


ஒண்ணடி மண்ணடியாக் குடியிருக்கிற நாப்பத்தெட்டுக் குடிபடைங்களுக்கும் தலைக் கட்டுக் கொண்ட தலைப் புள்ளி என்று நான் சூட்டப்பட்டிருக்கிற பட்டத்துக்கும் மரியாதைக்கும் ஒரு சத்தியமான தருமமான அர்த்தமும் கிடைக்க முடியும் ? மனிதாபிமானத்தின் மேன்மையில் அவர் தலைநிமிர்ந்தார். எப்படியும் இந்தச் சாம்பன் நாட்டாண்மை அம்பலம் ஏறியாகணும் வைராக்கியம் சிலிர்க்கிறது.

கீழத்தெரு அங்கப்பன் தன் பட்டாளத்தோடு கொம்பும் தப்பும் சுமந்து, சாராய வெறியையும் சுமந்து, சுடுகாட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். பெரியவு களுக்குத் தண்டமிடுறோங்க!’ என்று கும்பிட்டபடி நடந்தார் .

சரி, சரி!’ என்றார் சாம்பான்.

சாக்குருவி கத்தியது.

மயிர் பிளந்து நியாயம் வழங்குவதில் மன்னரெனப் பேர் பெற்ற சாம்பானுக்கு உரிய மரியாதையை வழங்குவதில் சேரிக்குடி படைகள் என்றைக்குமே சோடை போக மாட்டார்கள்; சோடை போகவும் முடியாது! ஏன் தெரியு மா ? - இங்கே சாம்பான் வாக்குத்தான் வேதவாக்கு 1அன்றைக்கு வேலாயுதத்துக்கும் தெய்வானைக்கும் ஊடே ஊடாடிய சிக்கலுக்கு ஒரு நல்ல தீர்ப்பைச் சொல்லி நல்ல பேரைச் சம்பாதித்துக் கொண்ட சாம்பானைப் பற்றிச் சேரியிலும் சரி, அக்கம் பக்கத்து ஊர்களிலும் சரி எவ்வளவு பெருமையாகப் பேசிக் கொண்டார்கள்.

மாட்டுக் கொட்டகையில் பசுவும் கன்றும் குரல் கொடுத்தன. பரணிலிருந்து வைக்கோல் பிறி உதிர்ந்தது.

கால் மிஞ்சிகள் கெஞ்சுகின்றன.