பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170


அம்பலத்தரசன் உணர்ச்சி வசப்பட்டு எழுந்து பூமிநாதனை ஆரத் தழுவிக் கொண்டான்.

“நீங்களும் இம்மாதிரியான கடமையைச் செய்து காட்டப் பின்வாங்க மாட்டீங்கண்ணுதான் நான் நம்பு கிறேன் !’ -

அம்பலத்தரசனை நோக்கிச் சொன்னான் பூமிநாதன். ‘ஆவணி பிறக்கட்டும். உங்களுக்கு என் சித்தாந்தம் புரியும் ! நான் அந்த நாடக எழுத்தாளருக்குக் கூறிய யோசனையை நானே செயல்முறையிலே செய்து காட்டத் தான் போகிறேன் ! எழுதுபவன் நடிகனாக இருக்கக் கூடாது ! நான் அந்தரங்க சுத்தியோடுதான் எழுதினேன் பலாத்காரமாகக் கற்பழிக்கப்பட்ட நல்ல பெண்களுக்கும் புது வாழ்வு கொடுக்கப்பட வேண்டுமென்று ஆகவே இப் போது என் எழுத்தையே மனோதர்மமாகக் கொண்டு உதாரணமாக்கிக் காட்டத் தயாராகவும் இருந்திட்டு வருகிறேன் ! அதற்குகந்த வாய்ப்பும் எனக்குத் தெய்வா தீனமாய்க் கை கூடியிருக்குது இதோ பாருங்க. இந்தப் பூப்பொட்டலத்தை இது என் காதலிக்கு என் அனு தாபத்துக்குரிய அ ந் த அபலைக்குத்தான் இந்தப் பொட்டலம் !’ .

முத்துக்கள் அம்பலத்தரசனின் அழகிய விழிகளைத் துறந்தன. -

ரோஜா மடல்கள் தெரிந்தன. - “நீங்க ஒரு அதிசய புருஷர், மிஸ்டர் அம்பலத்தரசன்!” அவனைக் கையெடுத்துக் கும்பிட்டான் பூமிநான்.

‘கும்பிடாதீங்க. அவ்வளவு பெருமைக்குரியவனல்ல நான். நான் மனிதன் ; மனிதனாகவே வாழ விரும்புகிற ஒரு மனிதன் நான். அவ்வளவுதான் !’ .

“நான்கூட கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். என் கல்யாண விஷயமாய் உங்ககிட்டே சில