பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175


‘வாங்க மிஸ்டர் பூமிநாதன். இவளை உங்களுக்கு அறிமுகப் படுத்திவைக்கிறதிலே நான் சந்தோஷப்படு கிறேன்” என்று அம்மனைச் சுட்டி, “நான் நம்பியிருக்கும் என்னுடைய இரண்டாவது தாய் இவள்!’ என்று முடித் தாள் ஊர்வசி.

பூமிநாதனின் கரங்கள் கூப்பின; கூப்பிய கரங்கள் ஏன் இப்படி நடுங்கித் துடிக்கின்றன ?

அம்பலத்தரசனுக்குப் பழக்கப் பட்ட தாய் அவள். கைகூப்பிக் கைதொழுதான் அவன். கண்கள் - அவன் கண்கள் ஏன் இப்படி நடுங்கித் துடிக்கின்றன ?

மனம் விரிந்து, கண் விரிந்து, ஜோடி இதழ் விரிந்து கும்பிட்டாள் ஊர்வசி, நித்திலங்கள் கால்விரல்களை முத்தமிட்டன

கை கடிகாரத்தைப் பார்த்தாள் ஊர்வசி, மணி பதினொன்று பத்து,

ஏறுமுகச் சுடரொளி சினம் காட்டத் தொடங்கி விட்டதோ ?

  • வாங்க, இதுதான் என்வீடு. வாடகை வீடு,’’ என்றாள் ஊர்வசி

அம்பலத்தரசனைத் தொடர்ந்தான் பூமிநாதன். அவன் கால்கள் இடறின -

அண்டை அயலிலிருந்த பெண்டுகள் சிலர் இவர்கள் மூவரையும் கள்ளத்தனமாகப் பார்த்துக் கள்ளத்தனமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள் எப்படிச் சிரித்தார்கள் தெரியுமா ? பைத்தியங்கள் மாதிரி ! - பைத்தியங்களுக்கும் சுயநலம் விலக்கல்லவே !

மூன்று ஜோடி நடையன்கள் வாசலுக்குக் காவல்.