பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177


அவனுடைய மார்பில் தெரிந்த அந்த ரத்தத் தழும்பு இப்போதும் அம்பலத்தரசனைத் துரண்டிலாக இழுத்தது.

அம்பலத்தரசன் தன் நண்பனை ஏறிட்டுப் பார்த்தான். “பூமிநாதன்? இதென்ன உங்க செஸ்ட்டிலே இவ்வளவு பெரிய காயம் ? என்று கொஞ்சம் ஆர்வத்தோடு கேட்டு வைத்தான்,

இக் கேள்வியைக் கேட்டதும், அதாவது, காது சாய்த்துக் கேட்டதும் பூமிநாதனின் முகம் சலனம் அடைந்தது. சலனம் ஒரு மாத்திரைப் பொழுதுக்குத் தான் இருந்தது. பிறகு சமாளித்துக் கொண்டான். தன்னைத்தானே ஒரு முறை குனிந்து பார்த்தவனாக, ‘இதுதானே ? சொல்கிறேன் அது ஒரு சோகக்கதை’ என்று துயரச் சரட்டை மறைத்துக்கொண்டு சரளமாக்ச் சொல்லிக் கொண்டிருக்கையில், மீனாட்சி அம்மாள் இலை

கள் சகிதம் கூடத்துக்கு வந்தாள். வாங்க!’ என்று பொதுப்படையான வரவேற்பை வீசினாள் முதியவள், அவளைத் தொட்டுக் கொண்டு ஊர்வசியும் வந்து நின்றாள்.

“இவர் வில்லன் பூமிநாதன். என் கூட ட்ராமாவிலே நடிச்சவர்’ என்று பூமிநாதனைக் குறிப்பிட்டுச் சுட்டி தன் தாய்க்கு அறிமுகப் படுத்தினாள் ஊர்வசி, அவள் சுவரைப் பார்த்த போது, வழக்கம் போல அபயக்கரம் காட்டி அருள் நகை சொடுக்கிக் கொண்டிருந்த வல்லவேல் முருகனைத் தரிசித்தாள்.

  • அப்படியா? ரொம்ப நல்ல பிள்ளையாகப் பதவி சாக இருக்காரே “ என்றாள் மீனாட்சி அம்மாள்.

பூமிநாதன் கையெடுத்து மீனாட்சி அம்மாளைக் கும்பிட்டான். --------. . . . -

இவங்க என் தாயார் !'