பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


மங்கத்தா, “நானுதானுங்க’, என்று தன் வருகைக் கான அச்சாரம் கொடுத்தாள். “வயிறு பசிக்குமே, மூத்தவு களே?” என்றாள்.

‘வயிறு பசிக்கல்லே, புள்ளே; மானம்தான் பசிக்கு தாக்கும்!”

சாம்பானின் மானம் தெய்வானையின் மானாபிமானச் சிரிப்பில் தான் ஊசலாடிக் கொண்டிருக்க வேண்டும்!-- “நம்ம தெய்வயானைப் பொண்ணைப் பத்தின காரண காரியச் சங்கதி ஏதாச்சும் காதுக்கு விழுந்திச்சா ?’ என்று வினவினார்.

ஊம் கொட்டினாள் உடையவள்.

தேள் கொட்டின பாங்கிலே, தவித்தார் உடையவர்.

சமச்சானே! நீங்க கொஞ்சம் முந்தி அம்மன் கோயிலைப் பூட்டிக்கிணுதிரும்பையிலே நின்ன மாதிரியேதான் தெய் வானைப் பொண்ணு ஆத்தா சந்நதியிலே கல்லு சிலைக் கொப்ப இன்னுமும் நின்னுக்கிணு இருக்குதாமுங்க!”

‘என்னவாம் சங்கதி, மங்கத்தா?’

‘போன கடுத்தம் கன்னி விரதம் இருந்தப்ப என்னமோ தப்பு கிப்பு ஏற்பட்டதாலேதான் தன்னோட கண்ணால வாழ்க்கை தன் மனசுக்கு ஒப்பினாப்பிலே நல்ல தனமாக வாய்க்கலைன்னு நெஞ்சு ஒடுஞ்சி போன தெவ்வி இப்ப. இப்ப...’ என்று தொடர்ந்த பேச்சைத் தொடரமுடியாமல் தயங்கினாள்.

“ஊம், ஆரம்பிச்சதை முடிச்சுப் போடு”, என்று ஆசை மனைவியைத் தூண்டினார் ஆசைக் கணவர்.