பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$80

நொடிப் பொழுதில் அவன் இருக்கையை விட்டு எழுந்தான்.

“ஐயோ! ஊர்வசி என்று கதறிக் கொண்டு ஓடி ஊர்வசியின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந் தான். நான் பாவி துரோகி சண்டாளன் ஐயோ தெய்வமே !’ என்று கூக்குரலிட்டு மண்டையில் அடித்துக் கொண்டு, மண்டை முடியைப் பிய்த்துக் கொண்டு ஒலம் பரப்பினான்.

தீக் கணப்பைத் தீண்டியவனை ஒத்துத் துடித்தான் அம்பலத்தரசன். ஊர்வசியை நோக்கினான்.

ஊர்வசி வைராக்கியமாகச் சிலையாக அப்படியே நின்றாள் !

பூமிநாதன் கைகுவித்து ஊர்வசியைக் கும்பிட்டான்.

‘நான் மிருகமாகி விட்டேன் ஊர்வசி...மிருகமாகி விட்டேன். உன்னை நாடகத்திலே கற்பழிக்கிற கட்டத்திலே உன்னை மேனி தொட்டு அணைச்ச அந்த இன்ப ஸ்பரிசம் என்னைப் பத்தியமாக்கிடுச்சு அந்த வெறியிலே நான் மிருகமாகி விட்டேன். எனக்கு உன் மன்னிப்போ, என் மனச்சாட்சியோட மன்னிப்போ, அல்லது ஆண்ட வனோட மன்னிப்போ கட்டாயம் கிடைக்க முடியாதுங் கிறதும் எனக்குப் புரியாமல் இல்லை அமரர் தொழும் பூவை அநியாயமாய்க் கசக்கி நுகர்ந்து வீசிட்டேன். குற்றவாளி இதோ உன் முன்னே மண்டியிட்டு இருக்கேன். எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு !

நானே உன்னைத் தேடித்தான் வந்தேன். அதுக் குண்டான பக்குவம் இன்னிக்கிக் காலம்பறத்தான் எனக்கு வந்திச்சு என் பாவத்தைச் சொல்லி அழத்தான் நண்பரை நாடினேன். வழியிலே நண்பர் அறையிலே நாம் சந்தித் தோம். ஊர்வசி ! நீங்க...நீ...விரும்புற தண்டனையைக் கொடு என் நெஞ்சு வெடிச்சுச் சிதறுறதுக்கு முன்னாடி