பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10


தெவ்விப்பொண்ணு இந்த வாட்டி ரெண்டாந் தடவை யாகவும் கன்னி நோம்பு இருக்கத் துணிஞ்சிருக்குதாமுங்க, மச்சான்!” மெய்யாமா ?”

“மெய்யாலுமே தானுங்க!”

“அப்படின்னா?”

“தெய்வானை தனக்கு வேலாயுதம் கட்டின தாலியை அவன் கையிலேயே கழற்றி வீசிப் போட்டுப்புட்டு, இப்ப தன் மனசுக்கு ஒப்புற ஒரு நல்லவனை - மெய்யாலுமே நல்ல வனாக இருக்கிற ஒரு நல்ல மனுசனைத் தேடுறத்துக்காகத் தான் இப்ப மறுதக்கமும் கன்னி விரதம் இருக்கத் துணிஞ்சிருக்குதாம்!”

சாம்பான் மனம் அதிர்ந்தார். அநியாயம் இல்லையா இந்த நடப்பு ?’ என்று வேதனைப்படலானார்.

“அந்த வேலாயுதம் குடி குடிச்சுப் போட்டு, ஒரு பாவ மும் அறியாத - வேலாயுதத்துக்கு வாழ்க்கைப்பட்டதைத் தவிர வேறே ஒரு பாவத்தையும் அறிஞ்சிராத இந்த அபலைப் பொண்ணு தெவ்வியைக் கண்ணும் மண்ணும் புரி யாமல் அடியோ தண்டம்னு புளியம் மிலாறினாலே அடிச் சுப் போட்டது பத்தாதின்னு. அதோட கன்னம் ரெண்டி லேயும் நகத்தாலே கீறிக் கிழிச்சது மட்டும் அநியாயம் இல்லையாங்காட்டி ? - ஆத்திரம் தாங்காமல் கொதித் தாள் மங்கத்தா, -

தலைக்குடுமி அவிழ்ந்ததுகூடத் தெரியாமல் வாய டைத்தார் சாம்பான் பூசாரி கட்டாயமா அநியாயந்தான்; இந்தப்பாவம் ஆத்தாளுக்கே அடுக்காதுதான் !” என்றார். மயிர்பிளந்து நாயம் படிக்கும் அவருடைய மனஇயல்பு கட்டி சொன்ன சத்தியத்துக்கு ஒர் ஆமோதிப்பாகவே அமைந்தது அவரது பேச்சு. - - - - .