பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 1

‘அதனாலேதான், ஆத்தா தூண்டியோ என்னமோ நம்ம தெய்வானை அவளோட மச்சானையே-மஞ்சள் தாலி பூட்டின புருசனையே பதிலுக்குப் பதில் கை நீட்ட்வும் செஞ்சிடுச்சு இப்ப வேலாயுதத்தை ரத்துப் பண்ணிட்டு வேறொரு நல்லபடியான நிழலிலே அண்டவும் மனசு துணிஞ்சிருக்காக்கும்’! - மங்கத்தாவுக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிற்று.

வரும் விதி வழித்தங்குவது கிடையாது !

ராத்திரியானாலும், பகலானாலும் அதுவேதான் விதியின் விதியாக இருக்கலாமோ ?

ஆகவேதான் -

தெய்வானை ரோசமும் வைராக்கியமும்முட்டி முயங் கிட, இரவு முழுவதும் அம்மனைச் சாட்சி வைத்து மறு படியும் கன்னி நோன்பு மேற்கொள்ள திட்டமிட்டு விட்டாளோ ?

சாம்பான் மிடறு விழுங்கினார் . தன்னோட உசிருக்கு நேசமான தெய்வப் பொண்ணை ஆயுள்பரியந்தம் தன் கூடவே வச்சிருக்கிற பொறுப்பும் குடிக்காரப்பயமவன் வேலாயுதத்துக்கு ஆயிமகமாயி எ ழு தி ப் போடல்லே போலே! அதான், விதி கூட்டத்திலே கோவிந்தா போட்டுக் கூத்தடிக்குது!’ - மனிதத்தன்மையின் ஈரம் நினைவுகளை புல்லரிக்கச் செய்திருக்கலாம்.

“கவுச்சி சேராத அழுகின குழம்பின் வாசனை எட்டு ஊருக்கு வீசத் தொடக்கியது.

  • @

சாறு ஆறிடப் போவுதுங்க, மச்சானே !’

« * gərrth”* !

தெய்வானை மனம் ஆறமாட்டாளா ?