பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H5

கேணியடியிலும் ஊருணிக்கரையிலும் சந்தைக் கூட்டத் திலும் ஊர்வாய் முணமுணத்தது.

ஜாதி ரோஜா அனலில் கால்இடறியும் கால் தவறி யும் விழுந்து விட்டால், அது வாடாதா ? வதங்காதா ? தெய்வானை ஏங்கினாள் ; தவித்தாள் !

சேதி அறிந்த கூட்டுக்காரி வள்ளிக்கும் ஒரு புதுப்பயம் ஈரல் குலையைத் துளைத்துக் குலைய வைத்தது. “நான் நேசம் வச்சிருக்கிற வேலாயுதம் மச்சான் இதுமட்டும் நல்ல ஆளுன்னுதான் பேரெடுத்திருக்குது ; ஆனாலும் அதோட சுயரூபத்தை யார் கண்டது ? எந்தப் புற்றிலே எம்மாங்கொத்த பாம்பு ஒளிஞ்சிருக்குமோ ? - வேதனை யில் நெட்டுயிர்த்தாள் ; ஏமாற்றத்தில் குமைந்தாள்.

அன்றைக்கு பூராவும் சிநேகிதிகள் இருவரும் சோறு தண்ணிர் சாப்பிடவில்லை ; அவர்களுக்கு இரவு சிவராத்திரி ஆனதுதான் மிச்சம். மறுநாள் விடியல் வேளையிலே, இருவரும் கள்ளுக்கடை நாவல்பழ மரத்தடியில் சந்தித் தனர். கூப்பிடு தொலைவில் கூப்பிடாமலே தெரிந்த தாராடி சாமியை நேந்து கொண்டனர்.

“அடியே வள்ளி மனசுக்கு மனசுதான் சாட்சி ; மற்றதுக்குச் சாமிதான் காட்சின்னு ஒரு பேச்சு எங்க அப்பத்தா சொல்லும் அதொத்து, நாம்பளும் நமக்கு உண்டான வாழ்க்கையை நேசத்தோடவும் பாசத்தோடவும் சீராக்கிட வேணும், நம்ப விதி, நாம தாழ் ந் த சாதியிலே பொறந்துபூட்டோம் ; ஆனாலும் ஒசந்த சாதியிலே ஆண் - பெண் காதலுக்குக் கொடுக்கற மரியாதையைக் காட்டிலும், நாம நம்புற மனச்சுத்தமான ஆண் பெண் நேசத்துக்கு நாம ரொம்பவும் உண்டனவே முதல் மரியாதை செலுத்துகிறோம். மனசுக்கும் மனசுக்கும் ஊடாலே பிறக்கிற நேசம் பூர்வ ஜென்ம விளையாட்டுக்