பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


விதி யாரை விட்டதாம் ?

ஒருநாள், பொன் அந்தி வேளையில், அழகே உரு வான கன்னிப் பூஞ்சிட்டு தெய்வானை அம்மான் கம் மாயில் நீராடி அழகே உருவாகச் செவ்வந்திப் பூப் போலப் புன்னகை செய்த வண்ணம், வண்ணக்கலாப மயில்போல் குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவளுக்குப் பின்புறத்திலே ஓடி வந்த வேலாயுதம் போதை வெறியில் அவளைக் கட்டியனைத்துப் பலாத்காரம் செய் யவே, அவனிடமிருந்து தன்னையும் தன் பெண்மையையும் கற்பையும் தற்காத்துக் கொண்டு வீரிட்டாள். அம்மன் சந்நதியிலே நெடுஞ்சாண் கிடையாகப் போய் விழுந்து கதறிக் கதறி ழுதாள் கெட்டவன், நல்லவனாக ஆவ தற்கும், நல்லவன் கெட்டவனாக உருமாறுவதற்கும் கைந் நொடிப்பொழுது போதும் போலும்!

“ஆத்தாளே மூத்தவளே! இம்மாம்பெரியசோதனையை எனக்கு வச்சுப் பூட்டியே! நான் மனசறிஞ்சி ஒரு பாவத் தையும் செஞ்சதில்லையே ? .. ஆமா; என்னைக் கை நீட்டித் தொட்ட அந்தப் புதுப்பாவி வேலாயுதம்தான் இப்ப கைதொட்டு எனக்குத் தாலிகட்ட வேணுமாக்கும்! இதுக்கு நீயேதான் பொறுப்பு!” என்று விம்மி வெடித்தாள்.

காதலின் பாதை பிரிந்து விட்டதே!

சேதி சேரியெங்கும் காட்டுத் தி ஆயிற்று.

வள்ளி திச்சூடுபட்டுத் துடித்தாள். எந்தப் புற்றில் எந்த பாம்பு குடியிருந்ததென்ற ரகசியம் அவளுக்குப் புரிந்திருக்காதா!.

வள்ளியைத் தேடி ஓடிவந்தாள் தெய்வானை. வள்ளி, விதிகிட்டே நாம ரெண்டு பேருமே தோத்துப் போயிட்