பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


அவன், வேலாயுதம், தன் ஆத்திரம் பூராவையும் அபலை

தெய்வானையின் பேரில் கொட்டிக் கொட்டி அளந்தான்.

கொண்டவன் படி அளந்த லட்சணம் இது!

நினைவுப் பூக்கள் சிதறி முடித்தன!

சாம்பான் பூசாரி சுயப்பிரக்கினை அடையலானார். ஆத்தாளே! நாளைக்கு உனக்குப் பொங்கல் பண்டிகை ; எங்க தெவ்விப் பொண்ணுக்கு, ஒன்னோட தெய்வானைக் குட்டிக்கும் சத்தியமான, நாயமான, தர்மமான ஒரு நல்ல பொங்கல் வைபோகத்தை உண்டாக்கிக் கொடுத்துப்புடு, மூத்தவளே ! ?- ஈரவிழிகளிலே ஈரம் கசிகிறது; கசிந்து கொண்டேயிருக்கிறது !

[4]

இந்தேறலுக்கு மேம்பட்டதாகவும், பூப் போன்ற புலரிப்பொழுது பூவாகவே, மணக்கிறது !

ஊராண்டு உலகாளும் திரிசூலி அங்காளம்மன் பூப் போலச் சிரிக்கிறாள் ; சிரித்துக் கொண்டே இருக்கிறாள் !

தீபங்கள் எரிந்தன.

“பள்ளயம் படைத்த படையலிலே ஊதுவத்தி எரிகிறது.

பறைகள் கொட்டுகின்றன.

கொம்புகள் முழங்குகின்றன.

சேகண்டி ஒலிக்கிறது.

மணி ஓசை மிஞ்சுகிறது.

பூஜை நடக்கிறது.

இபாராதனை முடிகிறது: