பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2}

சுற்றிலும் தமிழ் பொங்கற்பண்டிகை. கொண்டாட் டம் போட்டது. கும்மி கொட்டியது ; கோலாட்டம் ஆடியது.

கரக ஆட்டம் உச்சாடனம் பெறுகிறது.

மறு கணத்தில் -

எதிர் அணியிலே, அணி வகுத்து அணிசேர்ந்திருந்த கன்னிப் பெண்கள் அத்தனைப் பேரும் வேப்பிலையும் கையுமாக உருவேறி, உருக் கொண்டு, உச்சாடனம் பெறத் தொடங்கினர் ! -"ஆத்தாளே என்ற குரல்கள் ஒலித்தன; எதிரொலித்தன

வேப்பிலைக்காரிக்குச் சிரிக்கத்தானா தெரியாது ?அவரவர்களின் விதிப்படியும் வினைப் பிரகாரமும் வாக் குகளை விதித்திட அவளுக்குத் தெரியாதா, என்ன ?

தலைக்குடுமி அவிழ்ந்து விழவும், விபூதி பட்டைகள் மேனிநெடுக்கிலும் துலாம்பரமாய்ப் பளிச்சிடவும் ருத்தி ராட்ச மாலை புரளவும் சிலை என நின்ற சாம்பன் பூசாரி இன்னமும் கூட சிலையாகவே நின்றார். அவர் நீக்கமறச் சுழன்றாள் ; சுழல்கிறாள் !... கண்ணிர் துளி களிலே அவர் சுழல, அவரைச் சூழ்ந்து கண்ணிர்த் துளி களும் சூழல்கின்றன !

‘ஆத்தாளே, மூத்தவளே ! ஆதி பராசக்தியே ! அங்கா ளம்மைத்தாயே எங்க சேரித்தங்கம் தெய்வானைப் பொண்ணுக்கு நம்மோட தமிழ்ச் சாதிப் பண்புக்கு அணு சரணையான நல்லதொரு பாதையத் திறந்து விட்டுப்புடு; அப்பத்தான், எங்க தெய்வானைக் குட்டிக்கு அதோட மாங்கல்யம் நல்லதனமாவும். நிரந்தரமாவும் நாயமாவும், சத்தியமாவும் நிலைச்சிருக்க ஏலும் : தெய்வானைப் பொண்ணுக்கு அதோட ஆத்திரத்தையும் கோபத்தையும் கலைச்சு, நல்ல புத்தியைக் கொடு ; அப்பத்தான் அவள்