பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


நல்வாக்கைப் பாவிமகன் வேலாயுதத்துக்கு - அவளோட மச்சான் வேலாயுதத்துக்கு - அவள் முந்தானை விரிச்ச குடிக்காரப் புருஷன் வேலாயுதத்துக்குத் தாரைவார்க்கவும் முடியுமாக்கும் ! ‘

வெயில் பளிச்சிடுகிறது. உணர்ச்சி சுழிப்பில் நீந்திச் சுழன்ற பெரியவர் மனம் விட்டுப் பேசி, வாய்விட்டுக் கதறினார் !

கூட்டத்தில் புண்ணிய பூமியின் நல்லமைதி நிலவுகிறது. மனிதர்கள் விம்முகின்றனர் !

(5)

“ஆத்தா

வீரிட்டு அலறிக் கதறிக் கொண்டே, தலைவிரிகோல மாக ஈரம் சொட்டச் சொட்ட ஒரு புனிதமான நியாய வெறியோடு ஒடிவந்தாள் தெய்வானை ; ஒடிவந்தவள், அப்படியே அம்மன் சந்நதியிலே அடித்து விழுந்தாள். விம்மினாள் ; .ெ வ டி த் தா ள் ; வேப்பிலைக்கொத்துக்கள் மாத்திரமல்ல, பூங்கொத்துக்களும் சிந்திச் சிதறுகின்றன !

வள்ளி கண்ணிரும் கம்பலையுமாக நின்றாள். உடன் அவள் புருஷன் முத்தையனும்தான் நின்றான்.

‘ஆத்தாளே ’’ மீண்டும் வீறிட்டாள் தெய்வானை. ஆனால் - -

ஆத்தா அங்காளம்மன் இப்பொழுதும் சிரித்துக்

கொண்டுதான் இருக்கிறாள் ! சிலையிலே ஜீவனாகிச் சிரித்துக் கொண்டே இருக்கிறாள் ஆத்தா.