பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26


தெய்வானை ஏறிட்டு விழித்தாள். திடீரென்று வாய் விட்டுச் சிரித்தாள் ; மறுநொடியில் மீண்டும் செருமத் தொடங்கினாள்.

“ஐயாவே ! ஆத்தா கல்லு ; ஆனதாலே, அவளுக்குப் பேசத் தெரியாது ; பேசவும் வராது அதனாலே, நான் இப்ப ஒரு நல்ல முடிவுக்கு வந்திருக்கேன் , அந்த முடிவைச் சொல்லிப்பிடறேன். ஆத்தா கேட்டாலும் சரி, கேட்காமல் போனாலும் சரி ; அதைப்பத்தி எனக்கு ரவையத்தனை அக்கறையோ, கவலையோ கிடையவே கிடையாது ! நீங்க கேட்டுக்கிடுங்க கன்னிப் பொண்ணுங்கதான் கண்ணாலம் கட்டிக்கிறதுக்கோசரம் கன்னி வி ர த ம் இருக்கிறது நாட்டிலே வழக்கம். ஆனா. நானும் ராத்திரி முச்சூடும் முழிச்சிருந்து கன்னி நோம்பு இருந்தேன். ஏன், தெரியுங் களா ? ஊர் என்ன நினைச்சிருக்குமோ ? - தெரியாது ங் நான் இன்னொரு கண்ணாலம் கட்டிக்கிறதுக்கத்தான் - இந்தக் குடிகாரப் புருஷன் வேலாயுதத்தோட தாலியை அந்த ஆள் கையிலே கழற்றிக் கொடுத்துப்புட்டு, வேறொரு ஆளைத் தேடிக்கட்டிக்கிடுறதுக்காகத்தான் நான் இப்படி! கன்னி நோம்பு பிடிச்சேன்னுகூட ஊர்நாட்டிலே நாக்கிலே நரம்பில்லாமல் கூட பேசிக்கிட்டிருப்பாங்க ! ஆன, நான் கண்ணியமான ரத்தத்துக்குப் பொறந்த பொண்ணாக்கும்! எனக்கும் சூடு, சுரணை, ரோசம், வைராக்கியம் எல்லாம் சாதி சம்பிரதாயம் பார்க்கிற ஒசந்த குடிக்காரங்க மாதிரியே எனக்கும் உண்டுங்க, மூத்தவுகளே ! கண்ணாலத்துக்கு முந்தித்தான். நாயப்படி நான் கன்னி விரதம் இருந் திருக்க வேணும். ஆனா, அதுக்கு வாய்க்காமல் பூடுச்சு ; என்னோட கண்ணாலம் திடுதிப்னு நடந்து முடிஞ்சிருக்குதுங் களே? அதாலேதான், அந்த விர த த் ைத இப்ப நடத்தினேன். ஏன், தெரியுங்களா ? என்னோட கழுத்திலே ஊசலாடிக் கிடக்கிற இந்தத் தாலி எப்பவுமே என் கழுத் திலே, பூவும், மஞ்சளும், பொட்டும் குலுங்க எப்பவுமே ஊஞ்சலாடிக்கிணு கிடக்கவேணும்னு தானுங்க நான் கன்னி