பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


அலறிப் புடைத்துக் கதறித் துடித்தவனாக, “சடுகுடு: ஒட்டமாக ஒடிவந்த வேலாயுதம். அப்படியே ஆத்தா, மூத்தவள் அங்காளம்மையின் காலடியிலே அடித்து வீழ்ந் தான். எழுந்தான். பின்பு, எந்தேவதையே! தெய்வித் தங்கமே!” என்று ஒலம்பரப்பிக் கூப்பாடு போட்டவாறு, தெய்வானையின் பாதங்களிலே அடைக்கலம் அடைந்தான்

தெய்வானை காட்டேரி ஆகிவிட்டாளா? காலடியிலே கிடந்த வேலாயுதத்தை - தாலி கட்டி மச்சான் ஆன வேலாயுதத்தை எட்டித் தள்ளிவிட்டாள், அவள்.

வேலாயுதம் தரை மீனாகத் துடித்தான். மேனியில் ஒட்டிக்கிடந்த மணலைத் தட்டக்கூட நினைவிழந்து எழுந்தான். அவனுடைய முகத்தில் பதித்துக் கிடந்த நகக்கீறல்களின் தழும்புகளும் இப்போது கதிர்களின் ஒளி வீச்சில் பளிச்சிடுகின்றனவே!

தெய்வானை ஓங்காரச் சிரிப்பைக் கக்கத் தொடங் கினாள்.

“தெவ்விப்புள்ளே!” விம்மினான் வேலாயுதம்,

“சீ!. இன்னொரு கடுத்தம் என்னைப் பேர்சொல்லி அழைக்காதே! நீ மிருகம்!’

‘நான் இப்ப மிருகம் இல்லே, தெய்வானை! நான் இப்ப மனுசனாத் திருந்திப் பூட்டேன் புள்ளே”

மறுதக்கமும் நாடகமா ஆடுறே நீ? உம்பட்டுக்கத்தும், சம்பமும் சவடாலும் இனிமே எங்கிட்டே ஒருக்காலும் பலிக்காது; பலிக்கவே பலிக்காது. மிருகமான ஒன்னை மனுசனாக மாத்த நான் திரிக்ரண சுத்தியோட பாடு பட்டதுக்காக, நீ என்னைச் செத்த சாரைப்பாம்பை