பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


எம்புட்டு வள்ளியும் இந்த ஆள் வேலாயதத்துக்கு ஒரு நல்ல பாடத்தைப் புடிச்சுக் கொடுத்ததாலே, இந்த மனுசன் என்னமோ மனசு திருந்தி நல்ல புள்ளியா மாறி இப்ப வந்திருக்கான்! பாவம், வேலாயுதம்! இவனுக்கு இம்மாங் கொத்த சோதிப்பு ஏற்பட்டிருக்கப் புடாதுதான்!”- நல்ல வழியைக் காட்டும்படி அங்காளம்மையை வேண்டிக் கொள்கிறான்.

செங்கதிர்கள் சூடேறின.

மனிதச்சபை மெளனம் காத்தது :

வைத்த விழி வாங்காமலே, அழகுத் தெய்வானையைதன்னுடைய அருமைப் பொண்டாட்டி தெய்வானையை இன்னமும் பார்த்துக் கொண்கட நின்றான் வேலாயுதம்,

தெய்வானையா, கொக்கா ?-அவளும் வேலாயுதத்தை தான் முந்தானை விரித்த தன்னுடைய அருமை மச்சான் வேலாயுதத்தை முறைத்தும் விறைத்தும் பார்த்துக் கொண்டே நின்றாள் !

சேரி நாய் ஊளையிடத் தொடங்கியது.

பற்களை நற நற'வென்று கடித்த வேலாயுதம், “ஏ தெவ்விப் பொண்ணே!” என்று விளித்து விட்டு, உலர்ந்து கிடந்த உதடுகளை நாக்கை நீட்டி ஈரப்படுத்திக் கொண்டே வாய் திறந்தான். - . .

‘ஏலே, தெய்விப்புள்ளே !. பொல்லாத இந்த மண்ணையும் பாழாய்ப்போன இந்த மண் வாழ்க்கையையும் என்னை விடவும் ரொம்ப நல்லாத் துப்பு கண்டு. புரிஞ்சிக் கிட்ட சொக்கப்பச்சை நீ என்கிற துப்பு எனக்கும் புரிஞ்சிது. அதாலேதான் நீ உனக்கு மஞ்சள் தாலி பூட்டின என்னை உதறிப் போட்டு புட்டு, அந்நியம் அசலார் வேறே ஒருத்தனை நீ மறு க ண் ண | ல ம் கட்டிக்கிடத்