பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


துணிஞ்சிட்டேன்னு சேரி முச்சூடும் தமுக்குக் கொட்டி பேசிக்கிட்ட பொல்லாப்பேச்சு எம்மானம் மரியாதையைச் சோதிக்க, அந்தக் கேடு கெட்ட அவமானத்தை பொறுக்க மாட்டாமல் ஒட்டமா ஒடியாந்து இப்ப உம் முன்னே நிக்கறதும் மெய்தான். ஆனாலும் அதே நோத்திலே உன்னோட வாய்ப்பேச்சையும் நான் கேட்டுக்கிடவும் வாய்ச்சிடுச்சு. இந்த தாலி மட்டுந்தான் இனிமே எனக்குச் சதம். எனக்குத் துணை. அப்படின்னு நீ கொஞ்ச முந்தி நெஞ்சை ஒளிச்ச வஞ்சனை இல்லாம நீ பேசின சத்தியம் என்னையும் ஒரு மனுசனாகவே மாத்த, அந்த நம்பிக்கை யிலேயும் தைரியத்திலேயும் தான் நான் உன்னைத்தேடி இப்ப ஆத்தா சந்நிதியிலேயே ஒடியாந்து நிற்கிறேன் என்கிறதுதான் மெய்தானாக்கும். ஆனாலும் இம்மாம் பெரிய கூட்டத்துக்கு நடுவிலேயும் நீ என்னையோ எம் பேச்சையோ நம்ப மறுத்து, மிருகமாக இருந்த நான் மனுசனாக மாறினதுக்கு உண்டான சாட்சியையும், அதுக்கு உண்டான ஆதாரத்தையும் நீ கேட்கிறே நீ மனப்பூர்வமா நம்பிக்கிட்டு இருக்கிற உம்புட்டு நெஞ்சு தாலிக்கே ஒரு அருத்தத்தை கொடுத்துக்கிட்டு இருக்கிற நான் மெய்யாலுமே நல்ல புத்தியை மீட்டுக்கிட்ட ஒரு அசலான மனுசனேதான் எ ன் கி ற சத்தியத்துக்கு உண்டான சாட்சியை மெய்ப்பிச்சு காட்டினாத்தான். நீ எனக்கு மாப்புத் தருவியா ? அப்படின்னா சரி; இப்பவே நான் சத்தியமாவே ஒரு நல்ல புள்ளிதான் என்கிற சத்தி யத்தை மெய்ப்பிச்சிக் காட்டுகிறேன்!

வேலாயுதம் தட்டித் தடுமாறியவனாகப் பேச்சை முடிக்கமாட்டாமல், சடக்கென்று நிறுத்தினான் !

அதற்குள்"ஐயையோ, தெய்வமே! ... நான் நம்பி மதிக்கிற எம்புட்டு நெஞ்சுத் தாலிக்கு புண்ணியமான - சுத்தமான

இ - 3