பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

.

தெய்வானையின் நெற்றியில் தடவி விடுகிறான் முத்தையன்.

ஆத்தா அங்காளம்மை இப்பொழுதும் சிரிக்கிறாள்; சிரித்துக் கொண்டிருக்கிறாள் !

[6]

சத்தியத்தின் தரிசனமாகவே, செங்கதிர்கள் மின்னிப் பளிச்சிட்டன, இப்போது. -

நாட்டு வைத்தியர் நல்லதம்பிச் சேர்வை நயமாகவும், விநயமாகவும் புன்ைைக செய்கிறார். ஆத்தாளே, மூத்தவளே ! புருஷனும் பொஞ்சாதியுமான வேலாயுதம்தெய்வானை ஜோடியோட கண்ணுகளை திறந்துவிட்டுப்புடு ஆத்தாளே, மூத்தவளே !’ என்று வி ம் மி வெடித்த வண்ணம், உலகத்தாயின் சந்நிதியை நோக்கி கரங்களைக் குவித்தார். கணங்கள், தெய்வக்கணங்களாகவே ஊர் கின்றன.

தெய்வானை கண் திறந்தாள்.

வேலாயுதத்தின் கண்கள் திறந்தன.

சுடு வெள்ளத்திரை விரித்த கண்களிலே தாலியைமஞ்சள் தாலியை ஒற்றிக் கொண்டே விம்மினாள். நேசமச்சாக்காரவுகளே ! எனக்கு மாப்பு கொடுத்துச் சமிச்சுப்புடுங்க. எம்புட்டு தாலியையும் பூ-மஞ்சள்பொட்டையும் உயிர் கழுவிலே ஊசலாடி செஞ்சுசோதிச்சு அந்த சோதனையையே சாட்சி விச்சி நீங்க மெய்யாலுமே மனுஷன்தான் என்கின்ற சத்தியத் தருமத்துக்குச் சாட்சி சொல்லிப்புட்ட நீங்க மெய்யாலுமே எனக்குத் தெய்வம் ஆகிப்பூட்டீங்க, ஆசை மச்சானே?’ வீரத் தமிழச்சியாகச் செருமுகிறாள் தெய்வானை, அன்பு மச்சானை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுகிறாள் !