பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழையில் நனையாத மேகங்கள்

மிருகத்தின் மூர்த்தண்ய வெறி இப்பொழுதுதான் அடங்கியதோ ?

மூச்சு, மஞ்சி விரட்டுப் பாய்ச்சலாக மூட்டியது: மோதியது ; சிதறியது.

கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டமாதிரி இருந்தது.

அவன் நின்றது காடுதான், தாராடிச்சாமிக்குக் குடிக் காணியாட்சிப் பாத்தியம் கொண்ட காடு ; பொட்டல் காடு ஆனால், அவனுடைய கண்களை யாரும் கட்டி விடவில்லையே? - இருட்டு, க ண் ைண - கண்களை மறைத்தது ; மறைக்கிறது ! - விதியும் மறைத்திருக்குமோ? இருட்டு என்றால், கண்மண் தெரியாத - புரியாத இருட்டு ; பேய் இருட்டு ; கொள்ளிவாய்ப் பிசாசுக்கு இருட்டு என்றால், கொள்ளை கொள்ளையான ஆசை யாமே ? - கொள்ளை கொண்டு ; கொள்ளை கொடுத்த ஆசையோ, என்னவோ? - எண்சாண் உடம்பு சூ, மந்திரக் காளி !’ போட்டு பாவனையில், ஒரு சாணாகவும் ஒற்றைச் சாணாகவும் கூனிக் குறுகி நடுநடுங்கித் தொலைக்கிறதே ?

மயான அமைதி, - .

ஒர் ஈ காக்கை மூச்சுக் காட்ட வேண்டுமே !

மூச் !

நரிப் பண்ணைக்கு இப்போது தான் ஊளையிடத் தெம்பு வந்திருக்கலாம். - - - - - -

அவனுக்குச் சுயப்பிரச்சினை சிலிர்த்தது.

‘ஐயையோ ...'