பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


இருட்டுக்கும் அப்படித்தானோ ? அவள் Tುಡಿಹ o

யார் அவள் ?

பேர் என்ன ?

எந்த ஊர் ?

“ஐயையோ ! - என்னோட மானம் பறி போனதுக்குப் பொறகாலே, நான் இனிமே என்னத்துக்குப் பாளாப் போன இந்த உசிரை வச்சுக்கோணும் ?” -

வாய் விட்டும் மனம் விட்டும் கதறிக் கொண்டே, கிறுக்குப் பிடித்தவனாக, விதிக்குப் பயந்தவனாக ஓடினான் இருட்டையும் காட்டையம் துளைத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கிறான் ! பிடி கயிறும் தானுமாக ஒடிக் கொண்டேயிருக்கிறான் !

அவன் : முத்துலிங்கம்,

“சடுகுடு வெளையாட்டிலே, விதியையே மண்ணைக் கவ்வ வச்சுப் பூட ரோசிச்சேன் ; அந்தப் பாவத்துக்கு - அந்தப் பழிக்கு இந்தாலே தானே மண்ணோட மண்ணா கிடப் போறேனே எம்மாங் காலமா எம்புட்டுக் கற்பைஎன்னோட பரிசுத்தத்தைக் கட்டிக் காத்துக் காபந்து பண்ணிக்கிட்டு வந்தேன். பணத்தைப் பூதம் காத்த தாட்டம் ? - ஆனா கடோசீலே, அல்லாமே, கண்னை மூடிக் கண்ணைத் தொறக்கிறத்துக்குள்ளாற பொய்யாகிப் பூடுச்சு: கனாவாகிப் பூடுச்சு ; பழங்கதையாகவும் ஆகிப் பூடுச்சே ! நான் எம்புட்டு நேசக் கண்ணாட்டி கிட்டக்க வச்ச சவாலிலே நான் தோத்துப்புட்டேனே! - ஆத்தாளே மகமாயியோ ! எம்புத்தியான புத்தியை ஏண்டி ஆத்தா திசை மாத்தினே ? அவதார மோகினி கணக்கிலே ஒரு சின்னக்குட்டியை - ஒரு புதுக் குட்டியை ஏதுக்கு இந்தக்