பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


‘பலே-உங்களுக்கு நல்ல யாபகம் இருக்குதுங்க! -- ஒங்க பேச்சு எம்பூட்டு நெஞ்சிலவும் எழுதி கெடக்குது தான்!- ஆனாக்க, இது மட்டுக்கும் நீங்க ஒங்களோட பரிசுத்தத்தை - ஆண்மையைக் கட்டிக் காத்துக்கிட்டது ஒசத்தி இல்லே! - இன்னிக்கு ராவுப் பொழுது மூச்சூடும் நீங்க திரிகரண சுத்தியோட இருந்து, ஒங்க வீரியத்தையும் ஆண்மையையும் கட்டிக் காத்துக் காபந்து செஞ்சுக் கிட்டீங்கன்னா, பொழுது விடிஞ்சதும் ஆயி மகமாயி சந்நிதானத்திலே நான் ஒங்களுக்குத் தாலிகட்டின பொஞ் சாதியாக ஆகிப்புடுவேனுங்க! ஒங்க தருமமும் சத்தியமும் பொய் இல்லே என்கிற நடப்பை நான் உண்மையின்னு நம்பிட்டேன்னா, அப்பாலே, நம்ப ரெண்டு பேருக்கும் ஊடாலே குறுக்குச்சாலோட்ட வேற எந்த முட்டுக் கட்டையுமே கெடையாதுங்க, மச்சானே!”

‘ப்பூ! - இ ம் யூ ட் டு த் தானே ? துல்லியமான என்னோட நெஞ்சிலேயும் நினைவிலேயும் பரிசுத்தமான நீ குடியிருந்து, என்னோட சீவனுக்கே சீவனாய் நீ உருக் கொண்டு இருக்கையிலே, நான் வேற ஒரு குட்டியை ஏறெடுத்துப் பார் க் கிற து க் கு நான் ஒண்ணும் பாவி இல்லேயாக்கும்! நல்ல விந்துக்கு பொறந்தவனாக்கும் நான்! இந்தச் சத்தியத்தையும் தருமத்தையும் கூட, நான் நிலை நாட்டி உங்கிட்டே ெம ய் ப் பி ச் சும் காட்டிப்புடுறேன், அன்னக்குட்டி!’

சபாசு, மச்சான், சபாசு! ஆத்தா மகமாயிதான் ஒங்களுக்குத் துணை இருக்க வேணுமுங்க!”

“நீயும் தான் துணை நிற்கோனும்!”

புனிதமான சிரிப்பையே புனிதமானதொரு விதியாக

ஆக்கிப் படைத்துவிட்டு, கன்னிப்பூ அன்னம் மறைந்து விட்டாள்!