பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

மங்கலம் குப்பன் அல்லாரையும் தூக்கியெறிஞ்சிப் புட்டு சர்வசாதாரணமான என்னைக் கட்டிக்கிடுறதுக்கு மனசு இரங்கிய புண்ணியவதியாச்சே அன்னக்கிளி! - அன்னக்கிளி கிட்டே என் பரிசுத்தத்தை ரூபிச்சுக் காட்டிப்புட, இனிமெ அட்டியும் இல்லை ; துட்டியும் இல்லே! தாராடிக் காட்டுக் கம்மாயிலே விளுந்து எந்திருச்சு நேரா குடிசைக்குப் பறிஞ்சு துணியை உதறிக் கையைத் தலைக்கு அணை வச்சுக்கினு படுத்திட்டேன்னா, அப்பாலே; விடிபொழுது என்னைத் தட்டி எழுப்பிப்பிடும். ஒட்டமா ஓடி, என்னோட கிளிகிட்டக்க நான் பரிசுத்தமான புள்ளி என்கிற சத்தியத்தையும் தர்மத்தையும் சொல்லிக் காட்டி அவளை - எம்பூட்டு 'புள்ளெ’யைக் கும்மாளம் போட வச்சிட்டேன்னா. அப்பவே, ஆயி, மகமாயிக்கு முன்னரிக்கே அவ கழுத்திலே மூணு முடிச்சுச் போட்டுப் புடுவேனே!.... ஆகா! - நானு ரொம்ப ரொம்பக் கொடுத்துவச்சவன் தான் - அதுதான் என்னோட ஆசைக்கிளியை எடுத்துக் கிடப் போகுறேனே! '

ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தான் முத்து லிங்கம். நடந்தான் ; குளித்தான் ; திரும்பி நடந்தான் ; திரும்பிப் பார்க்காமலே நடந்தான். அன்னக்கிளியின் துணை சேர்த்து நடந்தான். சுள்ளி கட்டிச் செல்லக் கையுடன் கொண்டு வந்த பிடிகயிறு குலுங்கிட நடந்தான்.

சோதனைக்கும் 'மோகினி அவதாரம் ! எடுக்கத் தெரியுமோ ? - : -

"ஐயையோ !”

சுயப் பிரக்கினை மறுபடி சிலிர்த்தது.

அந்த வேப்பமரம் இப்போது பளிச்சென்று பூதாகார மாகத் தரிசனம் தந்தது! வேப்பமரந்தானா? - இல்லை, காவு கேட்கும் ராட்சத அவதாரமா