பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


‘ஏ, புள்ளே! ஊர் பேர் தெரியாத எம்புள்ளே! விதி யாட்டமா வந்தவ, வினையை விதைச்சுப்பிட்டு, விதியாட் டமே கண்ணுக்குக் காணாமல் மறைச்சி பறிஞ்சிட்டீயே? ந்ா வெதைச்ச வினையை நானே அறுவடை செஞ்சுப் புடப் போறனாக்கும்!’ - இதயம் வீரிட்டது

கயிறு ஊசலாடுகிறது. அவன் உயிரைப் போலவா ?

சுடுசரம் சுட்டது : ‘பொண்ணாப் பொறந்தவ ஒருத்தியோட விலை மதிக்க முடியாத மானத்துக்கு விலை பேச, உப்புப் புளிக்கு உதவாத கேவலம் இந்த முழக்க யித்தையே கருவியாக்கிக்கிடத் துணிஞ்சேனே பாவி நான், நானு போகுடிச் செம்மம் ; ஈனப் பொறப்பு ஆகிவிட்டேன்; நாதியத்த பாவி நான் ; கதி மோட்சம் கெடைக்க மாட்டாத கேடுகெட்ட பாவி ஆயிப்புட்டேன் ; - நான் செஞ்சிருக்கிற பாவம் மூணாம்பேருக்குத் தெரியாது ; நான் சுமந்திருக்கக் கூடிய பழி எனக்கு மட்டுந்தான் அத்துப்படி! துப்புத் தெரியாத எம் பாவத்துக்கும் பழிக்கும் பாவ புண்ணிய ஐந்தொகைப் படிக்கு உண்டான சம்பளக் காசைக் கட்டுறதுக்கு - கூலிப் பணத்தைச் செலுத்துறத் துக்கு இப்ப இதே கயித்தையே நானும் கருவியாக்கிக்கிட வேண்டிய அவலத்துக்கு என்னை ஆளாக்கிப்பிட்ட மகமாயியோட - ஊர் பேர் தெரியாத எம்புள்ளெயைப் போலவே ஊர் பேர் தெரியாத மகமாயியோட நயமான சகத்துக்கு ஈடேது, எடுப்பேது ?”

விம்மல் வெடித்தது; இனி, அவன் நெஞ்சம் வெடித்து விட வேண்டியது தான். ஊஹாம், வெடித்து விடும் , பாவம் 1 ...

பாவமாம், புண்ணியமாம் !

சே !

இ - 4