பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


நரியின் ஊளைச்சத்தம், சத்தம் கேட்காமலே இடு கிடுக்கிற்து,

முத்துலிங்கத்தின் ஈரல்குலை நடுநடுங்குகிறது, அவன் தன் காதலுக்குக் குறுக்கே நின்ற போட்டியாளர்களிட மெல்லாம் “நானு பனங்காட்டு நரியாக்கும் என்பானே!

இருள் கனத்தது. நிலவும் கனத்தது.

அவன் மறுபடி விம்மி வெடித்தான். ஆனால், இன்னமும் அவன் நெஞ்சம் வெடித்து விடவில்லை மனம் பொங்குமாங்கடலாக ஆர்ப்பரித்தது ; ஆரவாரம் செய்தது; முழக்கம் போட்டது. எல்லாம் தன்னைத் தானே தரிசனம் செய்து கொண்டதன் விளைவு ; எதிர் விளைவும் கூட செருமல் உள்வட்டமாகச் சுழிக்கத் தொடங்குகிறது : ‘ஏலே, பொண்ணு ஒன்னை யாருன்னும் எனக்குத் தெரியாது ; இன்ன பேரின்னும் புரியாது ; எந்த ஊர் அப்படின்னும் விளங்கல்லே. இம்மாங்கொத்த அருப்புருவ மான இடுசாமக் கூத்துக்கு ஊடாலே தான், நீ விதியாய் நின்னே, என்னோட விதியாவே நின்னே. மோகினி அவதாரமே எடுத்துக்கிட்டுத்தான் வந்தீயோ, என்னமோ? - என்னோட பாளத்த மோகம் ஒன்னை மட்டும் அழிச் சீடல்லே. இந்தாலே, என்னையும் அழிச்சிப்புடப் போவுது! நான் அழியறதைப் பத்தி இத்தியும் கிலேசப்படல்லே : கிலேசப்படவும் மாட்டேன். நான் அநியாயமா அழியறது. தான் நாயம் ! ஆனா, ஒரு பாவமும் அறியாத - புதுக் கருக்குக் குலையாத சமைஞ்ச குட்டியான நீ அநியாய மாய் அழிஞ்சிட்டியே, அந்தப் பொல்லாத விதியை - விதியோட பிசகைத்தான் இன்னமும் கூட என்னாலே நாயப்படுத்திப் பார்க்க ஏலவே மாட்டேங்குது !... ஒன்னோட விதியின் எழுத்தையே சுக்கல் நூறாய்க் கிழிச்சுப் போட்டதாலே தானே, ஒங்கதையே திசைமாறிப் பூடுச்சு ஐயையோ, தெய்வமே எந்தெய்வமே !’ -