பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


அந்தப் பெரும் புண்ணியத்துக்குப் பாக்கியவான் நிலையி லேருந்து நான் ஒனக்கு நன்றி சொல்லிப்பூடத்தான் ஒன்னைச் தேடித் தேடி அலைஞ்சேன்! இருந்திருந்து இந்தக் கவிகாலத்திலே தெய்வமானது மனுசங்களுக்குத் தரும தரிசனம் கொடுக்கிறதாவது? நான்பாவி! ஐயையோ!

கூதல் அடித்தது.

சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் முழங்கால் மட்டாம்!

அவனுக்கு முழங்கால் முட்டிகள் வலித்தன. அதனால் தான் அவன் திரும்பத் திரும்பப் புலம்புகிறானோ ? ஏ.புள்ளே! விட்டகுறை - தொட்டக்குறை என்கிறது. பொய் இல்லைன்னுதான் எனக்குப் படுது இல்லாட்டி நம்பளுக் குள்ளாற ஒரு சொந்த பந்தம், பந்தபாசம் எப்படி ஏற் பட்டிருக்க முடியுமாம் ?

அது சரி; ஒன்னை ஒரேயொரு நொடிக்குக் கொத் தடிமை ஆக்கிக்கிட்டு, மறுநொடியிலே ஒனக்கு விடுதலை கொடுத்திட்டேனே? - அதுக்கப்பாலே, நீ ஏன் ஒடினாய்? எங்கே ஒடினே ஊம்; தெய்வாதீனமாய் ஒரு வேளை நீயே மனசு மாறி, மனசு இறங்கி, மனசு துணிஞ்சு என் முன்னாடி வந்து குதிச்சால், உன்னோட கூந்தல் வாசனை ஒண்டிபுத் தான் ஒன்னை எனக்கு இனம் காட்ட உதவும்:

நீ யாராம்? எந்த ஊராம்! என்ன பேராம்? ஒன் கற்பைச் சூறையாடிப்புட்ட சமிக்க ஏலாத மாபாவத்துக்கு ஒங்கிட்டக்க மாப்பு’க் கேட்டுத் தப்பிச்சுக் கிடத்தான் நான் ஒன்னைத் தேடி அலைகிறேன்னு மட்டும் நீ தப்புக் கணக்குப் போட்டியோ. மறுகா எனக்குக் கெட்டாப்பிலே கோபம் பொத்துக்கினு வந்திடுமாக்கும்!